ஞாயிறு, 14 மே, 2017

புதிய மின்நூல் வெளியீடு பற்றிச் சில...

"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலிற்கான பதிவுகள் யாவும் 15/05/2017 நள்ளிரவு 11.59 மணிக்குப் (இலங்கை-இந்திய நேரப்படி) பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதாவது, 16/05/2017 இற்கு முன்னதாக உங்கள் பதிவுகளை wds0@live.com இற்கு அனுப்பிவைக்க வேண்டும்.
மதிப்புக்குரிய வலையுறவுகளே! "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே! - முதற் தொகுப்பு" என்ற மின்நூலிற்கான பதிவுகளை அனுப்பிவைத்த உள்ளங்களுக்கும் நடுவராகச் செயற்பட்டு ஒத்துழைத்த அறிஞர்களுக்கும் நன்றி.

நடுவர்களின் விருப்பை ஏற்று "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே! - இரண்டாம் தொகுப்பு" என்ற மின்நூல் 'வாசிப்புப் போட்டி-2017' நடைபெற்ற பின்னர் வெளியிடவுள்ளோம்.

அடுத்ததாக
"தமிழர் ஆட்சி செய்த குமரிக்கண்டம்"
"இந்தியா முழுவதும் தமிழர் வாழ்விடமே!"
"இலங்கை முழுவதும் தமிழர் வாழ்விடமே!"
ஆகிய தலைப்புகளில் மின்நூல் வெளியிட எண்ணியுள்ளோம். "இந்தத் தலைப்புகளில் மின்நூல் வெளியிட தாங்கள் அனுமதிப்பீர்களா?" என Google+, Facebook இல் பகிர்ந்தேன்.

"நன்று, ஆய்வு பூர தகவல்களுடன் சொல்லுங்கள். நற்பணி." என்றும் "நம்பகரமான ஆதாரங்களை இணைத்தல் வெற்றியாகும்." என்றும் "அனுமதி எதற்கு, வெளியிடுங்க பார்க்கலாம்" என்றும் அறிஞர்கள் எனக்குப் பதிலளித்தார்கள்.

"தற்போது 'உலகில் முதலில் தோன்றியது தமிழ் மொழி! - முதற் தொகுப்பு' என்ற மின்நூல் வெளியிட உள்ளேன். அதற்குப் பல அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டியே வெளியிடுகிறேன். இவற்றுக்கும் அவ்வேறே அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி வெளியிடுவேன்." என நானும் அவர்களுக்குப் பதில் வழங்கினேன்.

தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணியென பயனுள்ள மின்நூல்களை வெளியிடும் பணியில் நாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகளைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

4 கருத்துகள்:

நல்லது, கெட்டது எதுவானாலும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவும்.