திங்கள், 24 அக்டோபர், 2016

வாசிப்புப் போட்டி - 2016


யாழ்பாவாணன் வெளியீட்டகம் (http://www.ypvnpubs.com/), யாழ் மென்பொருள் தீர்வுகள் (http://www.yarlsoft.com/) இணைந்து தமிழர் மத்தியில் தமிழறிஞர்களின் பொத்தகங்களைப் படிக்க (நூல்களை வாசிக்க) ஊக்குவிக்கும் பணிச் செயலாக, பொத்தகங்களைப் படித்தால் (நூல்களை வாசித்தால்) பரிசில் வழங்கும் போட்டியை அறிமுகம் செய்கின்றனர்.

எமது மின்நூல் களஞ்சியத்தில் உள்ள மின்நூல்களைப் பதிவிறக்கி வாசிக்க வேண்டும். தாங்கள் வாசித்ததை வைத்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான பதிலை வழங்குவோருக்குப் பரிசில் வழங்கப்படும். கேள்வி கேட்கப்படும் நாளன்று, பொத்தகங்களைப் படித்தாயினும் (நூல்களை வாசித்தாயினும்) பதிலைத் தயாரித்து அனுப்பமுடியும்.

முதற் பரிசு - 15 அமெரிக்க டொலர்
இரண்டாம் பரிசு - 10 அமெரிக்க டொலர்
மூன்றாம் பரிசு - 05 அமெரிக்க டொலர்

இலங்கையிலிருந்து வங்கிக் கணக்கு ஊடாகப் பணம் அனுப்ப இயலாமையால், PAYPAL/ WALLET கணக்கு ஊடாகப் பரிசில்களை வழங்க எண்ணி உள்ளோம். போட்டியாளருக்கு PAYPAL/ WALLET கணக்கு இல்லையாயின், அவர்களது நம்பிக்கையான நண்பர்களின் PAYPAL/ WALLET கணக்கிற்கும் அனுப்பி வைக்கப்படும்.

07/10/2016 தொடங்கி 21/12/2016 வரையான காலப்பகுதியில் எமது களஞ்சியத்தில் (இணைப்பு:- http://goo.gl/mvGnw) "படைப்பாளியாக முயல்வோருக்கு" என்ற பிரிவில் (போல்டரில்) உள்ள நூல்களைப் பதிவிறக்கிப் படியுங்கள்.

இவற்றில் இருந்து இருபது கேள்விகள் பொறுக்கி இதே தளத்தில் 28/12/2016 அன்று இலங்கை - இந்திய நேரப்படி அதிகாலை 12.01 இலிருந்து இரவு 11.59 வரையான காலப்பகுதியில் கேட்கப்படும். இவ் இருபது கேள்விகளுக்குச் சரியான பதிலை வழங்குவோருக்குப் பரிசில் வழங்கப்படும்.

பதில் வழங்குவோர் 48 மணி நேரத்திற்குள் yarlpavanang1@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு subject இல் "வாசிப்புப் போட்டி - 2016" எனத் தட்டச்சுச் செய்து, கேள்விகளுக்கான சரியான பதில், போட்டியாளரின் சொந்தப் பெயர், முகவரி, PAYPAL/ WALLET கணக்கிற்கான மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை அனுப்பவும்.

இப்போட்டிக்கான பரிசில்களை 2017 தைப்பொங்கல் நாளன்று PAYPAL/ WALLET ஊடாக அனுப்பி வைக்கப்படும்.

புதன், 5 அக்டோபர், 2016

எமது அறிவிப்புயாழ்பாவாணன் வெளியீட்டகத்தின் துணைச் செயற்பாடாக தமிழ் வலைப்பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக்குவதோடு, எல்லோருக்கும் பயன் தரும் மின்நூல்களை இணையத்தில் திரட்டிப் பேணிப் பகிரும் பணியையும் செய்கின்றோம். நூறாயிரத்திற்கு (ஒரு இலட்சத்திற்கு) மேலான தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணிப் பகிருவோம்!
அதற்கான செயற்பாட்டை இவ்வலைப்பூ ஊடாக வெளிக்கொணர எண்ணி உள்ளோம்.

தமிழ் அறிஞர்களின் நூல்கள்

இணைப்பு:- http://goo.gl/mvGnw

கணினி நுட்பப் பாட நூல்கள்

இணைப்பு:- http://sdrv.ms/1cBgSnf

யாழ்பாவாணன் வெளியீட்டக நூல்கள்

இணைப்பு: https://goo.gl/XkJPfH

பலவகைத் துறை சார் நூல்கள்

இணைப்பு: http://sdrv.ms/1cBgLbn


நாம், எமது பணிகளை மீள ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறோம். விரைவில் இவ்வலைப்பூ வழமைக்கு வந்துவிடும்.
தகவல்: யாழ்பாவாணன்