சனி, 23 டிசம்பர், 2017

2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்


வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "மதுவை விரட்டினால் கோடி நன்மை!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து 31/12/2017 இற்கு முன்னதாக எதிர்பார்க்கின்றோம்.

ஏற்கனவே, இம்மின்நூல் வெளியீடு பற்றி கீழ்வரும் இணைப்புகளில் அறிவித்துவிட்டோம். கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன.


மதுவினால் உடல் நலம், மக்கள் நலம், நாட்டு நலம் கெடுமென்றும் மதுவினால் சீர்கெட்ட நிலைமைகளைச் சுட்டிக்காட்டியும் நன்மை கருதி மதுவை விலக்கி வையென்றும் வெளிப்படுத்தும் கவிதைகளை 10 - 20 வரிகளில் 31/12/2017 இற்கு முன்னதாக எழுதி அனுப்பலாம்.

தாங்கள் விரும்பிய தலைப்பில் முன்கூட்டியே எழுதிய பதிவாகவோ புதிதாக எழுதிய பதிவாகவோ இருந்தாலும் வலைப்பதிவர்கள் தங்கள் பதிவுகளை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு MS-Word File ஆக Latha Unicode Font இல் தட்டச்சுச் செய்து அனுப்பிவைக்க வேண்டும். பதிவுகள் யாவும் 10 - 20 வரிக் கவிதைகளாக (மரபுக் கவிதையாகவோ புதுக் கவிதையாகவோ) சொந்தப் படைப்பென உறுதிப்படுத்தி 31/12/2017 இற்கு முன்னதாக அனுப்ப வேண்டும்.

"License: Creative Commons Attribution-ShareAlike 4.0 International உரிமம் – கிரியேட்டிவ் கொமன்ஸ் காரணமறிவு - எல்லோரும் படிக்கலாம்; பகிரலாம்." என்ற உடன்பாட்டின் படி யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளியிடும் "மதுவை விரட்டினால் கோடி நன்மை!" என்ற அன்பளிப்பு (இலவச) மின்நூலில் எனது பதிவு இடம்பெற அனுமதியளிப்பதோடு ஒத்துழைப்பு வழங்குகிறேன் எனப் பதிவினை அனுப்பும் மின்னஞ்சலில் குறிப்பிடவேண்டும்.

மின்னஞ்சலுக்கான தலைப்பு (Subject) '2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்' என்றவாறு இருக்க வேண்டும். அத்துடன் பதிவை அனுப்பும் வலைப்பதிவர் PP Size அளவான முகம் அளவு படத்துடன் சொந்தப் பெயர், புனைப்பெயர், மின்னஞ்சல் முகவரி, நடைபேசி எண், வலைப்பக்க முகவரி என்பன அனுப்ப வேண்டும். குறித்த மின்நூலில் தங்களை அறிமுகப்படுத்த அதுவே பயன்படும்.

சிறந்த மூன்று பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம். Dicovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் இந்திய உரூபா 500/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான வெகுமதித் தாள்கள் (Gift Certificates) பரிசு பெறும் மூவருக்கும் தனித்தனியே வழங்கப்படும். இம்மின்நூல் வெளியீட்டிற்கான பரிசில்களை 31/01/2018 இற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படும்.

உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.
தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி,
யாழ்பாவாணன் வெளியீட்டகம்.

வியாழன், 21 டிசம்பர், 2017

வாசிப்புப் போட்டி - 2017 தேர்வு மதிப்பீடு

வலைவழி வாசிப்புப் போட்டி என்பது இலகுவானதல்ல. நூல்களை வாசித்து வினாக்களுக்கான விடைகளை அந்நூல்களில் இருந்து பொறுக்கி எமக்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்த முயற்சியில் இறங்குவோர், வாசிப்பைச் சரியாக மேற்கொள்ள வேண்டும்.

உலகெங்கும் தமிழ் பேசும் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க, வாசிப்பு மாதமாகிய ஐப்பசி (Oct) இல் அறிவித்து நடாத்தப்பட்ட "வாசிப்புப் போட்டி - 2017" இற்கான முடிவுரையை இப்பகுதியில் தருகின்றேன். இப்போட்டியில் நிறைவடையத்தக்க வகையில் பதில் கிடைக்காத போதும் (அதாவது, நூல்களை வாசித்து நூலாசிரியர்களின் பதிலைத் தொகுத்துத் தரமுடியாமை), கிடைத்த பதில் தொகுப்புகளில் ஒருவரை மகிழ்வோடு தெரிவு செய்துள்ளோம்.

அதாவது, நிறைவாக நூல்களை வாசித்துப் பதில் தந்த அவரை மதிப்பளிக்க விரும்புகிறோம். அவரது விரிப்பைக் கீழே தருகின்றோம்.. இனிய வலைவழி உறவுகளே, நீங்களும் அவரை வாழ்த்தி மதிப்பளித்து உதவுமாறு வேண்டி நிற்கின்றோம். நாமும் அவருக்கு Dicovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் இந்திய உரூபா 640/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான Gift Certificate ஒன்றை 01/01/2018 இற்கு முன்னதாக அனுப்பிவைப்போம்.

வாசிப்புப் போட்டி - 2017 இன் வெற்றியாளர்
சொந்தப் பெயர் - த.அபிநயா
முகவரி
பழைய எண் 50, புது எண் 84,
கப்பல் போலு தெரு,
பழைய வண்ணாரப்பேட்டை,
சென்னை – 600021

போட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும் நூலாசிரியர்களின் பதில்களும் கீழே தருகின்றோம்.

"செம்மொழியாம் தமிழைக் காப்போம்" என்ற நூலில் இருந்து...

1. எட்டுச் செம்மொழிகளின் பெயர்களையும் தருக? அவற்றில் இன்றுவரை வாழும் மொழிகளையும் வேறாகத் தருக?

2. தமிழைச் செவ்வியல் மொழியென்பதா? தமிழைச் செம்மொழி என்பதா? இதில் சரியானது எது? விளக்குக.

3. ஒரு மொழியைச் செம்மொழி என்றுரைப்பது பற்றி ஜார்ஜ் ஹர்ட் எவ்வாறு கருதுகிறார்?

4. இந்தியாவில் கன்னடர்கள் தமிழர்களாக இருந்த காலம்; தெலுங்கர்கள் தமிழர்களாக இருந்த காலம்; மலையாளிகள் தமிழர்களாக இருந்த காலம் ஆகியவற்றைக் குறிப்பிடுக?

"உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி" என்ற நூலில் இருந்து...


5. சமஸ்கிரத மொழியை விடத் தமிழ் முந்திய மொழி எனக் கருதப்படுகிறது. அது பற்றிய குறிப்பைத் தருக?


6. தமிழின் பெருமை தமிழராலும் அறியப்படாமல் இருப்பதற்குப் பத்துச் சாட்டுகள் உள்ளன. அவற்றை விவரிக்க?


7. "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி" என்றுரைக்கும் பாடலும் பாடியவர் பெயரும் தருக?


8. குமரிக்கண்டம் தொடர்பான கருத்துக்குச் சிலப்பதிகாரம், தொல்காப்பியம் கூறும் விளக்கமென்ன?

9. பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் கூறும் குமரிக்கண்டம் எல்லைகளை விளக்கு?


10. 2000 ஆம் ஆண்டில் இலங்கை வானொலி கூறிய தகவற் படி உலக மொழிகளின் எண்ணிகை எவ்வாறு மாறும்?

இங்கு பயன்படுத்தப்பட்ட நூல்களைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

இவ்வாறான 'வாசிப்புப் போட்டி - 2017' வாசிப்பு மாதமாகிய வரும் ஐப்பசி (Oct) மாதம் அறிவிக்கப்படும். இம்முறை போட்டியில் கலந்துகொள்ளத் தவறியோர், அடுத்த முறை போட்டியில் பங்குபற்றி உலகெங்கும் தமிழ் பேசும் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க இணையுமாறு பணிவோடு அழைக்கின்றோம்.

யாழ்பாவாணன் வெளியீட்டகம்
யாழ் மென்பொருள் தீர்வுகள்

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

வாசிப்புப் போட்டி - 2017 தேர்வுக் கேள்விகள்

https://seebooks4u.blogspot.com/2017/10/2017.html என்ற இணைப்பில் வெளியிடப்பட்ட பதிவின் வழிகாட்டலின் படி வாசிப்புப் போட்டி - 2017 இற்கான கேள்விகளுக்கு நிறைவான பதிலை அனுப்பி வெற்றி பெறுங்கள்.

மேற்காணும் இணைப்புகளைச் சொடுக்கி மின்நூல்களைப் பதிவிறக்கிப் படியுங்கள்.

இங்கு பத்துத் தேர்வுக் கேள்விகள் தரப்படுகிறது. பொத்தகங்களைப் படித்து; பொத்தகங்களில் உள்ளவாறு பதிலைத் தயாரித்து அனுப்பலாம். விடைகள் 48 மணி நேரம் கழித்து இத்தளத்தில் வெளியிடப்படும்.

"செம்மொழியாம் தமிழைக் காப்போம்" என்ற நூலில் இருந்து...
1. எட்டுச் செம்மொழிகளின் பெயர்களையும் தருக? அவற்றில் இன்றுவரை வாழும் மொழிகளையும் வேறாகத் தருக?
2. தமிழைச் செவ்வியல் மொழியென்பதா? தமிழைச் செம்மொழி என்பதா? இதில் சரியானது எது? விளக்குக.
3. ஒரு மொழியைச் செம்மொழி என்றுரைப்பது பற்றி ஜார்ஜ் ஹர்ட் எவ்வாறு கருதுகிறார்?
4. இந்தியாவில் கன்னடர்கள் தமிழர்களாக இருந்த காலம்; தெலுங்கர்கள் தமிழர்களாக இருந்த காலம்; மலையாளிகள் தமிழர்களாக இருந்த காலம் ஆகியவற்றைக் குறிப்பிடுக?

"உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி" என்ற நூலில் இருந்து...
5. சமஸ்கிரத மொழியை விடத் தமிழ் முந்திய மொழி எனக் கருதப்படுகிறது. அது பற்றிய குறிப்பைத் தருக?
6. தமிழின் பெருமை தமிழராலும் அறியப்படாமல் இருப்பதற்குப் பத்துச் சாட்டுகள் உள்ளன. அவற்றை விவரிக்க?
7. "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி" என்றுரைக்கும் பாடலும் பாடியவர் பெயரும் தருக?
8. குமரிக்கண்டம் தொடர்பான கருத்துக்குச் சிலப்பதிகாரம், தொல்காப்பியம் கூறும் விளக்கமென்ன?
9. பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் கூறும் குமரிக்கண்டம் எல்லைகளை விளக்கு?
10. 2000 ஆம் ஆண்டில் இலங்கை வானொலி கூறிய தகவற் படி உலக மொழிகளின் எண்ணிகை எவ்வாறு மாறும்?

பதில் வழங்குவோர் 48 மணி நேரத்திற்குள் yarlpavanang1@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு subject இல் "வாசிப்புப் போட்டி - 2017" எனத் தட்டச்சுச் செய்து, கேள்விகளுக்கான சரியான பதில், போட்டியாளரின் சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை அனுப்பவும்.

போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற வாழ்த்துகள்!

செவ்வாய், 10 அக்டோபர், 2017

வாசிப்புப் போட்டி - 2017


யாழ்பாவாணன் வெளியீட்டகம் (http://www.ypvnpubs.com/), யாழ் மென்பொருள் தீர்வுகள் (http://www.yarlsoft.com/) இணைந்து தமிழர் மத்தியில் தமிழறிஞர்களின் பொத்தகங்களைப் படிக்க (நூல்களை வாசிக்க) ஊக்குவிக்கும் பணிச் செயலாக, பொத்தகங்களைப் படித்தால் (நூல்களை வாசித்தால்) பரிசில் வழங்கும் போட்டியை அறிமுகம் செய்கின்றனர்.

எமது மின்நூல் களஞ்சியத்தில் உள்ள மின்நூல்களைப் பதிவிறக்கி வாசிக்க வேண்டும். தாங்கள் வாசித்ததை வைத்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான பதிலை வழங்குவோருக்குப் பரிசில் வழங்கப்படும். கேள்வி கேட்கப்படும் நாளன்று, பொத்தகங்களைப் படித்தாயினும் (நூல்களை வாசித்தாயினும்) பதிலைத் தயாரித்து அனுப்பமுடியும்.

07/10/2017 தொடங்கி 16/12/2017 வரையான காலப்பகுதியில் எமது களஞ்சியத்தில்(இணைப்பு:-  
https://app.box.com/s/odr4wniffpl7ha6e9bx4z1lkfplumtb0/folder/8361103989) "தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி" என்ற பிரிவில் (போல்டரில்) உள்ள நூல்களைப் பதிவிறக்கிப் படியுங்கள்.

இவற்றில் இருந்து பத்துக் கேள்விகளைப் பொறுக்கி இதே தளத்தில் 17/12/2017 ஞாயிறு அன்று இலங்கை - இந்திய நேரப்படி அதிகாலை 12.01 இலிருந்து இரவு 11.59 வரையான காலப்பகுதியில் கேட்கப்படும். இப்பத்துக் கேள்விகளுக்குச் சரியான பதிலை வழங்குவோருக்குப் பரிசில் வழங்கப்படும்.

பதில் வழங்குவோர் 48 மணி நேரத்திற்குள் yarlpavanang1@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு subject இல் "வாசிப்புப் போட்டி - 2017" எனத் தட்டச்சுச் செய்து, கேள்விகளுக்கான சரியான பதில், போட்டியாளரின் சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை அனுப்பவும்.

Dicovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் இந்திய உரூபா 640/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான Gift Certificates பரிசு பெறும் முதல் மூவருக்குத் தனித்தனியே வழங்கப்படும். இப்போட்டிக்கான பரிசில்களை 01/01/2018 இற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படும்.

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி நூல் வெளியீடு

அன்பிற்கினிய வலைவழி உறவுகளே!

வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக மின்நூல்களை வெளியிட முன்வந்திருக்கிறது. இவற்றை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாகப் (இலவசமாகப்) பகிரவுள்ளோம். "மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017" என்னும் முயற்சியில் இரண்டு மின்நூல்களை வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம்.
01. செம்மொழியாம் தமிழைக் காப்போம்
02. உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - 01

மேற்காணும் இரண்டு மின்நூல்களில் பதினான்கு அறிஞர்களுக்கும் அதிகமானோர் தமது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளனர். இவ்விரண்டு மின்நூல்களிலும் தமிழின் தொன்மை, தமிழின் எதிர்காலம், உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி எனப் பல  ஆய்வுப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. வாசகர் கருத்துகள் இணைக்கப்பட்டிருக்கிறது. சிறந்த தமிழ் அறிஞர்கள் மதிப்புரை வழங்கியுள்ளனர். இவ்விரண்டு மின்நூல்களையும் கருத்திற்கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வினைச் செய்ய பயனுள்ள தகவல் நிறையவே உண்டு.

தமிழ் பேசும் மக்கள் வாழும் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இவ்விரண்டு மின்நூல்களையும் பத்து நூறாயிரத்திற்கு (இலட்சத்திற்கு) அதிகமான வாசகர்கள் வாசிக்கும் வண்ணம் வலைப்பதிவர்கள் எல்லோரும் இவற்றைப் பகிர்ந்து உதவுங்கள். திறனாய்வாளர்கள் எல்லோரும் இவ்விரண்டு மின்நூல்களுக்கும் வலுச்சேர்க்கும் முகமாகத் தங்கள் திறனாய்வினைத் தந்துதவுங்கள். பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் உயர்நிலைக் கல்லூரி, பாடசாலை ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களை வாசிக்கத் தூண்டவும் பலருக்குப் பகிரச் செய்யவும் உதவுங்கள்.

வலை வழி ஊடகங்களும் இலத்திரனியல் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் இவ்விரண்டு மின்நூல்களின் உயர்ந்த நோக்கத்தையும் உயர்ந்த எண்ணங்களையும் பகிர்ந்து உதவுங்கள். இவ்வாறு இவ்விரண்டு மின்நூல்களுக்கும் கிடைக்கும் ஆதரவினை வைத்து நன்கொடையாளர்களின் உதவியினைப் பெற்று நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் உள்ள பொது நூலகங்களுக்காவது இலவசமாக அச்சடித்து இந்நூல்களை வழங்க முடியுமென நம்புகின்றோம். இதற்கு மேல் நானுரைப்பது அழகல்ல; நூல்களைப் பதிவிறக்குங்கள்; நூல்களுக்குள் புகுந்து தேடல்களைச் செய்யுங்கள்; உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்.


இலகுவாகக் குளிர்மையாகப் பார்வையிட

வழமையாகப் பார்த்துப் பதிவிறக்க


உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.

ஞாயிறு, 14 மே, 2017

புதிய மின்நூல் வெளியீடு பற்றிச் சில...

"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலிற்கான பதிவுகள் யாவும் 15/05/2017 நள்ளிரவு 11.59 மணிக்குப் (இலங்கை-இந்திய நேரப்படி) பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதாவது, 16/05/2017 இற்கு முன்னதாக உங்கள் பதிவுகளை wds0@live.com இற்கு அனுப்பிவைக்க வேண்டும்.
மதிப்புக்குரிய வலையுறவுகளே! "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே! - முதற் தொகுப்பு" என்ற மின்நூலிற்கான பதிவுகளை அனுப்பிவைத்த உள்ளங்களுக்கும் நடுவராகச் செயற்பட்டு ஒத்துழைத்த அறிஞர்களுக்கும் நன்றி.

நடுவர்களின் விருப்பை ஏற்று "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே! - இரண்டாம் தொகுப்பு" என்ற மின்நூல் 'வாசிப்புப் போட்டி-2017' நடைபெற்ற பின்னர் வெளியிடவுள்ளோம்.

அடுத்ததாக
"தமிழர் ஆட்சி செய்த குமரிக்கண்டம்"
"இந்தியா முழுவதும் தமிழர் வாழ்விடமே!"
"இலங்கை முழுவதும் தமிழர் வாழ்விடமே!"
ஆகிய தலைப்புகளில் மின்நூல் வெளியிட எண்ணியுள்ளோம். "இந்தத் தலைப்புகளில் மின்நூல் வெளியிட தாங்கள் அனுமதிப்பீர்களா?" என Google+, Facebook இல் பகிர்ந்தேன்.

"நன்று, ஆய்வு பூர தகவல்களுடன் சொல்லுங்கள். நற்பணி." என்றும் "நம்பகரமான ஆதாரங்களை இணைத்தல் வெற்றியாகும்." என்றும் "அனுமதி எதற்கு, வெளியிடுங்க பார்க்கலாம்" என்றும் அறிஞர்கள் எனக்குப் பதிலளித்தார்கள்.

"தற்போது 'உலகில் முதலில் தோன்றியது தமிழ் மொழி! - முதற் தொகுப்பு' என்ற மின்நூல் வெளியிட உள்ளேன். அதற்குப் பல அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டியே வெளியிடுகிறேன். இவற்றுக்கும் அவ்வேறே அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி வெளியிடுவேன்." என நானும் அவர்களுக்குப் பதில் வழங்கினேன்.

தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணியென பயனுள்ள மின்நூல்களை வெளியிடும் பணியில் நாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகளைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

திங்கள், 1 மே, 2017

கால நீடிப்பு - மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017


வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் கேட்டிருந்தோம்.

எமது அறிவிப்பைப் பணிவோடு ஏற்றுத் தமிழ் பற்றாளர்கள் பத்து ஆள்கள் தமது படைப்புகளை அனுப்பி இருந்தனர். சிலர் கால நீடிப்புக் கேட்டிருந்தனர். எல்லோரது ஒத்துழைப்பும் அல்லது எல்லோரது கூட்டு முயற்சியும் தான் "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிடப் பின்னூட்டியாக இருக்கும். எனவே, May 15 ஆம் நாள் வரை இம்மின்நூலுக்கான உங்கள் பதிவுகளை அனுப்பி வைக்கலாம் என்பதை அறியத்தருகின்றோம். அதாவது, 16/05/2017 இற்கு முன்னதாக உங்கள் பதிவுகளை அனுப்பிவைக்க வேண்டும்.

உங்கள் பதிவுகளை 'மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017' - https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html என்ற பதிவில் குறிப்பிட்டவாறு தங்கள் படம், தங்களைப் பற்றிய சுருக்கம் (நான்கைந்து வரிகளில்), தங்கள் வலைப்பூவில் வெளியிட்ட பின் அதன் இணைப்பு ஆகியவற்றை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

நன்நூல்.கொம் ஊடாகத் தாங்கள் விரும்பிய நூல்களைப் பெறப் பத்து டொலர் பெறுமதியான வெகுமதி தாள்கள் (Gift Certificates) சிறந்த மூன்று பதிவுகளை அனுப்பிய ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். பதிவுகளை அனுப்பிவைக்கும் அறிஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இவ்வொழுங்கு மூவர் என்ற நிலையைக் கடந்து நால்வருக்கு அல்லது ஐவருக்குப் பத்து டொலர் பெறுமதியான வெகுமதி தாள்கள் (Gift Certificates) வழங்க எண்ணியுள்ளோம்.

யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிடுவதற்கு அனுப்பி வைக்கப்பட்ட பத்து அறிஞர்களின் பதிவுகளை அவர்கள் அனுப்பிவைத்த ஒழுங்கில் கீழே தருகின்றோம். அப்பதிவுகளுக்கான காப்புரிமை (Copy Rights) அப்பதிவுகளை ஆக்கியோருக்கே உடையது. எவரும் அவர்களது அனுமதியின்றி அவர்கள் பதிவைக் கையாள முடியாது.

01. தமிழ் மொழி கட்டுரை - ஆசோகன் குப்புசாமி

02. தமிழும் தாய் மொழியும் - ஜி.எம்.பாலசுப்பிரமணியம்

03. உயர்தனிச்செம்மொழி தமிழ் - முனைவர் இரா.குணசீலன்

04. இன்னும் 100 வருடங்களில் தமிழ்மொழி அழிந்துவிடுமா? - பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

05. தமிழ் மொழியின் தொன்மை - பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

06. உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே! - அபிநயா சிறிகாந்

07. உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே - உமா நாராயணன்

08. முதற்றாய்மொழி: சில புரிதல்கள் - முனைவர் த.சத்தியராஜ்

09. தமிழின் செம்மொழித் தகுதிகள் - முனைவர் மு.பழனியப்பன்

10. தமிழ் மொழி உலகில் முதலில் தோன்றியதா? - யாழ்பாவாணன்

கூகிளில் 'உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்' குழுவூடாகவும் முகநூலில் 'தமிழ் பதிவர்களின் நண்பன்' குழுவூடாகவும் மேற்காணும் பதிவுகளை நாம் அறிமுகம் செய்துள்ளோம். வாசகர்களாகிய நீங்களும் இப்பதிவுகளை உங்கள் மக்களாய (குமுகாய/ சமூக) வலைப்பக்கங்களில் பகிர்ந்து உதவுங்கள்.

உங்களுக்குத் தெரிந்த வலைப்பதிவர்களில் எவராயினும் மேற்காணும் பதிவுகளைப் போல ஆக்கியிருப்பின், அவர்களுக்கு இம்முயற்சியைத் தெரிவித்து அவர்களது பதிவுகளையும் இம்மின்நூலில் இடம்பெறச் செய்ய உதவுங்கள்.

இம்முயற்சியை "நாளைய தலைமுறைக்குத் தமிழின் தொன்மையை உணர்த்தும் பணி" என்ற நோக்கில் தொடங்கினோம். PDF, Word கோப்புகளாக அனுப்பாமல் வலைப்பூக்களின் இணைப்பைக் கேட்டிருந்தோம். அதாவது, அவர்களுக்கான அடையாளத்தையும் அவர்களது வலைப்பூக்களையும் பன்னிரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவர்களுக்குத் தெரியப்படுத்தவே! இதனால், வலைப்பூக்கள் வழியே உலகெங்கும் தமிழைப் பரப்பலாம் என்ற நம்பிக்கையே!

உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

உலகின் முதன் மொழி தமிழாகுமா?

மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017 (https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html) என்ற பதிவில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிட இருப்பதாகவும் அதற்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடையே கேட்டிருந்தோம்.

உடனுக்குடன் மூன்று அறிஞர்கள் பதிவுகளை அனுப்பி எமக்கு ஊக்கமளித்துள்ளனர். அறிஞர்கள் சிலர் சித்திரை முப்பதிற்குள் அனுப்பி வைப்பதாகக் கூறி எம்மை ஆற்றுப்படுத்தியுள்ளனர்.

சுமேரிய மொழியா? வட மொழியா? தமிழ் மொழியா? உலகில் முதலில் தோன்றியது எனப் பட்டிமன்றம், வழக்காடு மன்றம் நடத்துவோரும் நம் மத்தியில் இருக்கலாம். அவர்களுக்காக உலகின் முதன் மொழி தமிழென்று சொல்லிவைக்கக் கீழ்வரும் இணைப்புகளைப் பொறுக்கித் தந்துள்ளேன்.


மேற்காணும் இணைப்புகளைச் சொடுக்கிப் பார்த்து உறுதிப்படுத்திய பின், தமிழ் இலக்கிய எடுத்துக்காட்டுகளை முன்வைத்து "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலுக்கான பதிவை எழுதித் தங்கள் வலைப்பூவில் பதிந்த பின்னர் அதன் இணைப்பை எமக்கு அனுப்பி வைத்து உதவுங்கள். மேலதிகத் தகவலுக்கு: https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

திங்கள், 20 மார்ச், 2017

மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017


வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

சிறந்த மூன்று பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம். அதாவது, நன்நூல்.கொம் ஊடாகத் தாங்கள் விரும்பிய நூல்களைப் பெறப் பத்து டொலர் பெறுமதியான வெகுமதி தாள்கள் (Gift Certificates) சிறந்த மூன்று பதிவுகளை அனுப்பிய ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.

http://www.ypvnpubs.com/2017/03/blog-post_17.html என்ற இணைப்பைச் சொடுக்கி 'தமிழும் உலகின் முதல் பத்து மொழிகளும்' என்ற பதிவைப் படித்த பின் "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற தலைப்பிற்கு ஏற்ற பதிவுகளை எமக்கு அனுப்பிவைக்கலாம். உலகில் முதல் தோன்றிய மொழி தமிழென்பதை நம்பக்கூடியவாறு பதிவுகளை ஆக்குதல் வேண்டும்.

தாங்கள் விரும்பிய தலைப்பில் முன்கூட்டியே எழுதிய பதிவாகவோ புதிதாக எழுதிய பதிவாகவோ இருந்தாலும் வலைப்பதிவர்கள் தங்கள் பதிவுகளை தங்கள் வலைப்பூக்களில் வெளியிட்ட பின்னர், அதற்கான இணைப்பை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

PDF, Word கோப்புகளாக அனுப்பி வைக்கக்கூடாது. வலைப்பூ இல்லாதவர்கள் வலைப்பூ ஒன்றை உருவாக்கி, அதிலே தங்கள் பதிவுகளை வெளியிட்ட பின்னர், அதற்கான இணைப்பை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

"License: Creative Commons Attribution-ShareAlike 4.0 International
உரிமம் – கிரியேட்டிவ் கொமன்ஸ் காரணமறிவு - எல்லோரும் படிக்கலாம்; பகிரலாம்." என்ற உடன்பாட்டின் படி யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளியிடும் "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற அன்பளிப்பு (இலவச) மின்நூலில் எனது பதிவு இடம்பெற அனுமதியளிப்பதோடு ஒத்துழைப்பு வழங்குகிறேன் எனப் பதிவின் இணைப்பை அனுப்பும் மின்னஞ்சலில் குறிப்பிடவேண்டும்.

மின்னஞ்சலுக்கான தலைப்பு (Subject) 'மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017' என்றவாறு இருக்க வேண்டும். அத்துடன் பதிவை அனுப்பும் வலைப்பதிவர் 120x160 pixel அளவான முகம் அளவு படத்துடன் ஐந்தாறு வரிகளில் தங்களைப் பற்றிய அறிமுகம் எழுதி அனுப்ப வேண்டும். குறித்த மின்நூலில் தங்களை அறிமுகப்படுத்த அதுவே பயன்படும்.

ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட பதிவுகளின் இணைப்புகளையும் வழங்கலாம். பதிவுகளைச் சித்திரை முப்பதாம் நாளுக்கு (30/04/2017) முன்னதாக அனுப்பிவைக்க வேண்டும். தங்கள் வலைப்பூக்களிற்கு பூட்டுப் போட்டிருந்தால் பரவாயில்லை. வாசகர் படித்துக் கருத்துப் போட அனுமதியளித்த வலைப்பூப் பதிவையே தெரிவுசெய்வோம்.

பதிவிற்கு வலுச் சேர்க்கும் நோக்கில் அமைந்த அதிகமான வாசகர் கருத்துகளைக் கொண்ட பதிவுகளையே சிறப்புப் பதிவாகத் தெரிவு செய்வோம். அதற்காகத் தாங்கள் ஆக்கிய பதிவை மக்களாய (சமூக) வலைத்தளங்களில் அடிக்கடி விளம்பரப்படுத்தலாம்.

எமக்குக் கிடைத்த பதிவுகளின் இணைப்பை நாமும் மக்களாய (சமூக) வலைத்தளங்களில் அறிமுகம் செய்து வைப்போம். 30/04/2017 இற்குப் பின் வரும் பதிவுகளின் இணைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. ஈற்றில் பதிவுகளைத் தொகுத்து மின்நூல் ஆக்கி வெளியிட்டதும் பரிசில் பெறும் பதிவிற்கு உரிய அறிஞர்களின் விரிப்பு இந்த வலைப்பூவில் வெளியிடுவோம். பின் அவர்களுக்கான Gift Certificates அனுப்பிவைக்கப்படும்.

உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.


"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலிற்கான பதிவுகளை எழுதுவோருக்கு உதவும் பதிவு.

உலகின் முதன் மொழி தமிழா?
http://www.ypvnpubs.com/2017/03/blog-post_24.html

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

வாசிப்புப் போட்டி - 2016 தேர்வு மதிப்பீடு

உலகெங்கும் தமிழ் பேசும் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க, வாசிப்பு மாதமாகிய ஐப்பசி (Oct) இல் அறிவித்து நடாத்தப்பட்ட "வாசிப்புப் போட்டி - 2016" இற்கான முடிவுரையை இப்பகுதியில் தருகின்றேன். இப்போட்டி சிறந்த ஒரு படைப்பாளியை அடையாளப்படுத்தி இருக்கிறது. அதனை நாம் வெற்றியாகக் கருதுகின்றோம்.

போட்டியில் பங்குபற்றியோரில் சிறந்த பதில்களை அல்லது எமது பதில்களுக்கு இசைவான பதில்களை வழங்கிய ஒருவருக்கு மாத்திரமே பரிசில் வழங்க முடிவு எடுத்துள்ளோம். அதாவது, நிறைவாக நூல்களை வாசித்துப் பதில் தந்த அவரை மதிப்பளிக்க விரும்புகிறோம். அவரது விரிப்பைக் கீழே தருகின்றேன். இனிய வலைவழி உறவுகளே, நீங்களும் அவரை வாழ்த்தி மதிப்பளித்து உதவுமாறு வேண்டி நிற்கின்றோம். நாமும் அவருக்கு 20 அமெரிக்க டொலர் பணப் பரிசினை 2017 பொங்கல் நாளன்று PayPal ஊடாகக் கிடைக்க ஒழுங்கு செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம்.

வாசிப்புப் போட்டி - 2016 இன் வெற்றியாளர்
சொந்தப் பெயர் - த.அபிநயா
முகவரி
பழைய எண் 50, புது எண் 84, கப்பல் போலு தெரு,
பழைய வண்ணாரப்பேட்டை,
சென்னை – 600021

போட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும் நூலாசிரியர்களின் பதில்களும் கீழே தருகின்றோம்.
"நீங்களும் எழுத்தாளராகலாம்" என்ற நூலில் இருந்து...
1. எழுத்துக்கலை ஏன் அவசியம்?
2. எழுத்துக்கலையின் மகிமையைக் கூறுங்கள்?
3. நீங்களும் எழுத்தாளராக முடியுமா?
"பேனா முனை" என்ற நூலில் இருந்து...
4. எழுதிய எழுத்துகள் அழியாது பேணும் தன்மைக்கு எது வேண்டும்?
5. ஊடக எழுத்தாளர்களின் வகைகள் எத்தனை?
6. எழுதிய ஆக்கத்தில் தோன்றக் கூடிய தவறுகள் எத்தனை?
"பாவலர் ஆகலாம்" என்ற நூலில் இருந்து...
7. கவிதை என்றால் என்ன?
8. புதுக்கவிதை இலக்கணம் எப்படி இருக்கும்?
"கட்டுரை எழுதுவது எப்படி?" என்ற நூலில் இருந்து...
9. கட்டுரை எழுதுவது எப்படி?
"சிறுகதை எழுதுவது எப்படி?" என்ற நூலில் இருந்து...
10. சிறிதாக உரைநடையில் விவரிக்கப்படுவது சிறுகதை ஆயின், அதனை எப்படிச் சொல்ல வேண்டும்?
இங்கு பயன்படுத்தப்பட்ட நூல்களைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
எமது களஞ்சியத்தில் (இணைப்பு:- http://goo.gl/mvGnw) "படைப்பாளியாக முயல்வோருக்கு" என்ற பிரிவில் (போல்டரில்) உள்ள நூல்களைப் பதிவிறக்கிப் படியுங்கள்.

இவ்வாறான 'வாசிப்புப் போட்டி - 2017' வாசிப்பு மாதமாகிய வரும் ஐப்பசி (Oct) மாதம் அறிவிக்கப்படும். இம்முறை போட்டியில் கலந்துகொள்ளத் தவறியோர், அடுத்த முறை போட்டியில் பங்குபற்றி உலகெங்கும் தமிழ் பேசும் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க இணையுமாறு பணிவோடு அழைக்கின்றோம்.

யாழ்பாவாணன் வெளியீட்டகம்
யாழ் மென்பொருள் தீர்வுகள்