செவ்வாய், 17 ஏப்ரல், 2018

தமிழ் இலக்கிய வழி - மின் இதழுக்கான பதிவுகளை இணையுங்கள்!



தமிழ் இலக்கியங்களில் இருந்தும் தமிழ் இலக்கியமாகவும் தமிழ் பேசும் உள்ளங்களை ஆற்றுப்படுத்தும் வழிகாட்டலும் மதியுரையும் திரட்டப்பட்டு மின் இதழாக வெளியிட எண்ணியுள்ளோம். அதற்கு இலகுவாக http://tev-zine.forumta.net/ என்ற கருத்துக் களத்தை ஆக்கியுள்ளோம். இதில் பத்துத் தலைப்புகள் தரப்பட்டுள்ளன. படித்தறிவு, பட்டறிவு, மற்றும் துறைசார் ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் பதிவுகளை தாங்கள் விரும்பிய தலைப்பின் கீழ் இணைக்கலாம்.

சங்ககால இலக்கிய வழிகாட்டல்கள்
அறிஞர்களின் வழிகாட்டல் கருத்துகள் (சிந்தனைகள்)
நகைச்சுவை ஊடாகவும் வழிகாட்டலாம்.
கடுகுக் கதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.
பாக்கள்/ கவிதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.
கல்வி, தொழில் வழிகாட்டலும் மதியுரையும்
மருத்துவ வழிகாட்டலும் மதியுரையும்
மெய்யியல் வழிகாட்டலும் மதியுரையும்
உளவியல் வழிகாட்டலும் மதியுரையும்
ஆளணி வளம் (மனித வளம்) மேம்பாடும் பேணுகையும்

தாங்கள் "யாம் பெற்ற கல்வி இவ்வையகமும் பெற வேண்டும்" என்பதற்கேற்பத் தங்கள் உள்ளத்தைத் தொட்டுணர்ந்து நமது நாளைய வழித்தோன்றல்களுக்குக் கூறும் வழிகாட்டல்களை மேற்படி தலைப்புகளின் கீழ் இணைக்கலாம். பாவலர், கதாசிரியர், கட்டுரையாசிரியர் எனத் தனியாளுமை அல்லது பல்துறை ஆளுமை கொண்ட தாங்கள், தங்கள் வழிகாட்டலையும் மதியுரையையும் விரும்பிய தலைப்பின் கீழ் இணைக்கலாம். ஒன்றிற்கு மேற்பட்ட தலைப்பின் கீழும் இணைக்கலாம். 

தங்கள் பதிவுகளை இணைக்க வேண்டிய தளம்: 
இத்தளத்தில் பயனர் பெயர், கடவுச் சொல் மற்றும் தங்களைப் பற்றிய தகவல் (Profile) வழங்கி இணையவும். குறித்த மின்இதழில் தங்களை அறிமுகப்படுத்த அதுவே பயன்படும்.

"License: Creative Commons Attribution-ShareAlike 4.0 International உரிமம் – கிரியேட்டிவ் கொமன்ஸ் காரணமறிவு - எல்லோரும் படிக்கலாம்; பகிரலாம்." என்ற உடன்பாட்டின் படி யாழ்பாவாணன் வெளியீட்டகம் "தமிழ் இலக்கிய வழி" என்ற காலாண்டு அன்பளிப்பு (இலவச) மின்இதழை வெளியிடும். எனவே, விரைவாக http://tev-zine.forumta.net/ என்ற தளத்தில் இணைந்து தங்கள் பதிவுகளை இணைக்கவும்.

வெளிவரும் ஒவ்வொரு மின்இதழிலும் தெரிவு செய்யப்படும் சிறந்த வழிகாட்டலும் மதியுரையும் கொண்ட 3 அல்லது 5 பதிவிற்குப் பரிசில் வழங்குவோம். பரிசில்களாக நூல்களை Dicovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் வாங்க வெகுமதிச் சான்றிதழ் (Gift Certificates) ஒவ்வொருவருக்கும் தனித்தனியே வழங்கப்படும். 

உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோரும் 
http://tev-zine.forumta.net/ என்ற கருத்துக் களத்தில் இணைந்து நாளைய வழித்தோன்றல்களுக்கு நல்ல வழிகாட்டலும் மதியுரையும் வழங்க முன்வருமாறு பணிவோடு அழைக்கின்றோம்.

உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.
தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி,
யாழ்பாவாணன் வெளியீட்டகம்.

6 கருத்துகள்:

  1. இணைய விருப்பம். என்னுடைய தளம் அகரம் http://agharam.wordpress.com இணைப்பது எப்படி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கான நுழைவுப் பெயர், கடவுச் சொல் வழங்கி http://tev-zine.forumta.net/ என்ற தளத்தில் இணையலாம். தளத்தில் உள்ள தலைப்புகளுக்கு ஏற்பத் தங்கள் பதிவுகளை இணைக்கலாம். தங்கள் வலைப்பூவில் பதிந்த பதிவுகளையும் இணைக்கலாம்.

      நீக்கு
  2. ஐயா, எனது வலைத்தளத்தில் ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன. அவற்றை நீங்கள் விரும்பினால் உங்கள் தளங்களில் வெளியிடலாம். எனது ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு. வாழ்த்துக்கள். நன்றி. :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் விருப்பத்தைப் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். "உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி" என்ற மின்நூலுக்கு ஏற்ற கட்டுரை தேவை. அதற்கான விரிப்பு https://seebooks4u.blogspot.com/2018/04/2018-4.html என்ற இணைப்பில் இருக்கிறது. மிக்க நன்றி ஐயா!

      நீக்கு

நல்லது, கெட்டது எதுவானாலும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவும்.