என்றும்
அறிவுப் பசி போக்க
நல்ல
நூல்களைப் படியுங்கள்...
நூல்கள்/பொத்தகங்கள்
- வெறும்
அச்சுத்தாள்களோ
மின்தாள்களோ அல்ல - அவை
பல
அறிஞர்களின் அறிவைச் சுமந்துகொண்டிருக்கும்
சுமைதாங்கிகளே!
- அவற்றை
நாம்
எல்லோரும் படிப்பதால்,
எம்மைப்
பேரறிஞர்களாக ஆக்கலாமே!
என்றும்
தங்கள் உள்ளத்தில்
"யாம்
பெற்ற கல்வி
இவ்வையகமும்
பெற வேண்டும்"
என்றெண்ணிய
அறிஞர்களே
தமிழை
மறந்த, தமிழை மறக்கும் உறவுகளுக்கு
இணையத்தள
மின்நூல் களஞ்சிய நூல்களை
எண்ணி
நூறு நண்பர்கள் அறியச் செய்வீரே!
நூறாயிரத்திற்கு
(ஒரு இலட்சத்திற்கு) மேலான தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணிப் பகிருவோம்!
உலகெங்கும்
வாழும் தமிழ் உறவுகளே!
எமது
தாய்மொழியாம் தமிழ் மொழி அறிவை எவரும் முழுமையாகக் கற்க முடிவதில்லை. கற்றுக்கொள்ள
முடிந்தளவு கற்றிட உதவும் மின்நூல்களைத் திரட்டி இணைய வழியில் எல்லோருக்கும் பகிர
இலகுவாக இம்மின்நூல் களஞ்சியம் உதவும். புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது
தொப்புள்கொடி உறவுகள், தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழி அறிவை ஊட்டி வளர்க்க
இம்மின்நூல்களைப் பயன்படுத்தி உதவுங்கள். குறைந்தது நூறாயிரம் (இலட்சம்)
மின்நூல்களைத் திரட்டித் தர உங்கள் யாழ்பாவாணன் முயற்சி செய்கின்றார்.
தமிழ்
மின்நூல் வெளியீட்டுப் பணி
உலகெங்கும்
தமிழைப் பேண உதவும் மின்நூல்களை ஆக்கி வெளியிடும் நோக்கில், எமது தமிழறிஞர்களின்
பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக்க எண்ணி உள்ளோம். எமது தலைப்புகளுக்கு ஏற்பத்
தங்கள் பதிவுகளை அனுப்பி உதவுங்கள். நாம் அவற்றை மின்நூலாக்கி வெளியிடுவோம்.
அம்மின்நூல்களை இக்களஞ்சியத்தில் பேணிப் பகிருவோம்.
தமிழ்
அறிஞர்களின் நூல்கள்
ஐம்பதுக்கு
மேற்பட்ட தலைப்புகளில் பல நூறு மின்நூல்களை இக்களஞ்சியத்தில் பேணுகிறோம். இனி
நூற்றுக்கு மேற்பட்ட தலைப்புகளில் பல ஆயிரம் மின்நூல்களை இக்களஞ்சியத்தில்
பேணுவோம். எல்லோரும் விரும்பும் எல்லாத் தலைப்புகளிலும் எல்லோரும் விரும்புகின்ற
மின்நூல்களைத் திரட்டிப் பேணத் தங்களின் ஒத்துழைப்பைத் தாருங்கள்.
இணைப்பு:
கணினி
நுட்பப் பாட நூல்கள்
உங்கள்
யாழ்பாவாணன் கணினிப் பாடங்களைக் கற்பித்த ஆசிரியர் என்பதாலும் கணினி மென்பொருள்,
வலைத்தளங்கள் வடிவமைப்பவர் என்பதாலும் கணினித் துறைசார் தேவைகளுக்குப் பயன்படும்
மின்நூல்களைத் தொகுத்துப் பேணுகின்றார். இவை ஆங்கிலத்தில் உள்ளன. இங்கு இன்னும்
பலநூறு மின்நூல்களைத் திரட்டிப் பேணவுள்ளோம்.
இணைப்பு:
யாழ்பாவாணன்
வெளியீட்டக நூல்கள்
எமது
யாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக நாம் வெளியிட்டுப் பகிரும் தமிழ் மின்நூல்களைத்
தொகுத்துப் பேணுகின்ற இடம் இதுவாகும். யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனியே
யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடாமல், பல அறிஞர்களின் பதிவுகளைத்
திரட்டி மின்நூல் ஆக்கி வெளியிடுகிறது. அம்மின்நூல்களை இக்களஞ்சியத்தில் பேணிப்
பகிருவோம்.
இணைப்பு:
பலவகைத்
துறை சார் நூல்கள்
ஏற்கனவே,
நாம் கூறிய மின்நூல் களஞ்சியங்களில் பேண முடியாத மின்நூல்களை இங்கு பேணுகின்றோம்.
இவை பலவகைத் தேவைகளுக்குப் பயன்படும். இவற்றைத் தொகுத்துப் பேணிப் பகிருவதால்
பலரும் நன்மை அடைவர். மேலும் பலவகைத் துறை சார் மின்நூல்களை இங்கே திரட்டிப்
பேணுவோம்.
இணைப்பு:
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குஅனைத்தும் சிறப்பு.தொடருங்கள். பலருக்கும் பயன் கிடைக்கட்டும்
பதிலளிநீக்குதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
நீக்கு