திங்கள், 1 மே, 2017

கால நீடிப்பு - மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017


வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் கேட்டிருந்தோம்.

எமது அறிவிப்பைப் பணிவோடு ஏற்றுத் தமிழ் பற்றாளர்கள் பத்து ஆள்கள் தமது படைப்புகளை அனுப்பி இருந்தனர். சிலர் கால நீடிப்புக் கேட்டிருந்தனர். எல்லோரது ஒத்துழைப்பும் அல்லது எல்லோரது கூட்டு முயற்சியும் தான் "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிடப் பின்னூட்டியாக இருக்கும். எனவே, May 15 ஆம் நாள் வரை இம்மின்நூலுக்கான உங்கள் பதிவுகளை அனுப்பி வைக்கலாம் என்பதை அறியத்தருகின்றோம். அதாவது, 16/05/2017 இற்கு முன்னதாக உங்கள் பதிவுகளை அனுப்பிவைக்க வேண்டும்.

உங்கள் பதிவுகளை 'மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017' - https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html என்ற பதிவில் குறிப்பிட்டவாறு தங்கள் படம், தங்களைப் பற்றிய சுருக்கம் (நான்கைந்து வரிகளில்), தங்கள் வலைப்பூவில் வெளியிட்ட பின் அதன் இணைப்பு ஆகியவற்றை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

நன்நூல்.கொம் ஊடாகத் தாங்கள் விரும்பிய நூல்களைப் பெறப் பத்து டொலர் பெறுமதியான வெகுமதி தாள்கள் (Gift Certificates) சிறந்த மூன்று பதிவுகளை அனுப்பிய ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். பதிவுகளை அனுப்பிவைக்கும் அறிஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இவ்வொழுங்கு மூவர் என்ற நிலையைக் கடந்து நால்வருக்கு அல்லது ஐவருக்குப் பத்து டொலர் பெறுமதியான வெகுமதி தாள்கள் (Gift Certificates) வழங்க எண்ணியுள்ளோம்.

யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிடுவதற்கு அனுப்பி வைக்கப்பட்ட பத்து அறிஞர்களின் பதிவுகளை அவர்கள் அனுப்பிவைத்த ஒழுங்கில் கீழே தருகின்றோம். அப்பதிவுகளுக்கான காப்புரிமை (Copy Rights) அப்பதிவுகளை ஆக்கியோருக்கே உடையது. எவரும் அவர்களது அனுமதியின்றி அவர்கள் பதிவைக் கையாள முடியாது.

01. தமிழ் மொழி கட்டுரை - ஆசோகன் குப்புசாமி

02. தமிழும் தாய் மொழியும் - ஜி.எம்.பாலசுப்பிரமணியம்

03. உயர்தனிச்செம்மொழி தமிழ் - முனைவர் இரா.குணசீலன்

04. இன்னும் 100 வருடங்களில் தமிழ்மொழி அழிந்துவிடுமா? - பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

05. தமிழ் மொழியின் தொன்மை - பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

06. உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே! - அபிநயா சிறிகாந்

07. உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே - உமா நாராயணன்

08. முதற்றாய்மொழி: சில புரிதல்கள் - முனைவர் த.சத்தியராஜ்

09. தமிழின் செம்மொழித் தகுதிகள் - முனைவர் மு.பழனியப்பன்

10. தமிழ் மொழி உலகில் முதலில் தோன்றியதா? - யாழ்பாவாணன்

கூகிளில் 'உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்' குழுவூடாகவும் முகநூலில் 'தமிழ் பதிவர்களின் நண்பன்' குழுவூடாகவும் மேற்காணும் பதிவுகளை நாம் அறிமுகம் செய்துள்ளோம். வாசகர்களாகிய நீங்களும் இப்பதிவுகளை உங்கள் மக்களாய (குமுகாய/ சமூக) வலைப்பக்கங்களில் பகிர்ந்து உதவுங்கள்.

உங்களுக்குத் தெரிந்த வலைப்பதிவர்களில் எவராயினும் மேற்காணும் பதிவுகளைப் போல ஆக்கியிருப்பின், அவர்களுக்கு இம்முயற்சியைத் தெரிவித்து அவர்களது பதிவுகளையும் இம்மின்நூலில் இடம்பெறச் செய்ய உதவுங்கள்.

இம்முயற்சியை "நாளைய தலைமுறைக்குத் தமிழின் தொன்மையை உணர்த்தும் பணி" என்ற நோக்கில் தொடங்கினோம். PDF, Word கோப்புகளாக அனுப்பாமல் வலைப்பூக்களின் இணைப்பைக் கேட்டிருந்தோம். அதாவது, அவர்களுக்கான அடையாளத்தையும் அவர்களது வலைப்பூக்களையும் பன்னிரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவர்களுக்குத் தெரியப்படுத்தவே! இதனால், வலைப்பூக்கள் வழியே உலகெங்கும் தமிழைப் பரப்பலாம் என்ற நம்பிக்கையே!

உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.

6 கருத்துகள்:

 1. அகரமுதல மின்னிதழிலும் கருத்துகள் வலைப்பூவிலும் காலநீட்டிப்புச் செய்தியைக் காண்க. இரு தொகுதிகளாக மின்னூலை வெளியிட வேண்டுகின்றேன். முதல் தொகுதி 10. பின் அடுத்ததற்கு மேலும் 3 திங்கள் கால வாய்ப்பு தருக. செவ்வையாக எழுத நேரமில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
  எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் மதியுரையை ஏற்றுக்கொள்கின்றேன்.
   முதலாம் பாகம், இரண்டாம் பாகம் என வெளியிடுவது பற்றி, பதிவுகள் வருவதைப் பொறுத்து மே 15 இன் தான் முடிவு எடுக்கலாம்.
   மிக்க நன்றி

   நீக்கு
 2. தமிழ் மொழி முதல் மூத்த மொழி என்பதை வலைப்பூக்கள் வழியே வாசமாய் தமிழ் மணம் பரப்பி , தரணி எங்கும் தமிழின்புகழ் பாட வைக்கும் தங்களுக்கு மிக்க நன்றி.., தமிழ் தாயும் பெருமை கொள்ளும் காலம் இது..!! அறிஞருக்கு அன்பின் வாழ்த்துக்கள்.., பல...ஒவ்வொருவரின் படைப்பும் ஒவ்வொரு விதம். நன்றி.

  பதிலளிநீக்கு

நல்லது, கெட்டது எதுவானாலும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவும்.