பதிவுகளை அனுப்புமுன்

பதிவுகளை அனுப்புமுன்...

எமது மின்நூல் தலைப்புகளைக் கருத்திற்கொண்டு, அத்தலைப்புகளுக்கு அமைவாகச் சிறந்த (Standard) பதிவுகளை எவராலும் எமக்கு அனுப்பிவைக்க முடியும். மின்நூல் தலைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு கவிதை, கட்டுரை, கதை, பாட்டு என எல்லா இலக்கியப் பரப்புகளிலும் பதிவுகளை இட முடியாதா என நீங்கள் கேட்கலாம். பெரும்பாலும் வரலாற்றுக் கட்டுரைகள், திறனாய்வுக் கட்டுரைகள், அறிமுகக் கட்டுரைகள், மதிப்பீட்டுக் கட்டுரைகள் என எழுதலாம்.

பழைய பாடநூல்கள் கவிதையில் தான் இருந்தன. அப்படியாயின் நீங்களும் கவிதை ஊடாக உங்கள் கற்பித்தலைக் காட்ட முடியும். மின்நூல் தலைப்புகளை அடிப்படையாகக் கொண்டு புதுக்கவிதையோ மரபுக்கவிதையோ ஆக்கலாம். தொல்காப்பியம், திருக்குறள் போன்று சிறப்பாக அமைந்திருந்தால் வரவேற்கப்படும்.

எந்தவொரு படைப்பாளியையும் நாம் கட்டுப்படுத்த முடியாது. அப்படிக் கட்டுப்படுத்த முனைந்தால் சிறந்த பதிவுகளை நாம் எதிர்பார்க்க முடியாது. கட்டுப்பாடுகள் இன்றிக் கலைஞரை தன் முனைப்பில் (சுதந்திரமாக) படைக்க ஒப்புதல் வழங்குவதன் மூலமே கனதியான படைப்புகளை எதிர்பார்க்க முடியும். எனவே சிறந்த மின்நூலாக மின்ன, மிளிர, ஏற்ற தங்கள் பதிவுகள் எதுவாயினும் நாம் ஏற்றுக் கொள்வோம்.

எமது மின்நூலில் இப்படித்தான் பதிவுகளை இணைக்கின்றோம்.

ஒவ்வொரு அறிஞரும் தனக்கென வலைபூக்களை நடாத்தித் தன் அறிவாற்றலைப் பகிருவது மிகநன்று. அப்படித் தங்கள் வலைபூக்களில் பதியப்பட்ட பதிவுகளின் இணைப்பை அல்லது பிற ஊடகங்களில் வெளிவந்த பதிவுகளை எமக்கு அனுப்பிவைக்கலாம். ஆனால், காப்புரிமைச் சிக்கல் ஏற்படாவண்ணம் எடுத்துக்காட்டிற்குப் பாவித்த எதனையும் எங்கிருந்து பெற்றீர், எவருடையது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட எல்லாப் படைப்புகளையும் நாம் அப்படியே எமது மின்நூலில் இணைத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், வெளியிடப்படும் மின்நூல்கள் யாவும் பயன் மிக்க, பலம் மிக்க (தரம் மிக்க), கனதியான மின்நூல்களாக இருக்க வேண்டும். அதற்கேற்ப அறிஞர் குழுவால் தெரிவு செய்யப்பட்ட பதிவுகளையே மின்நூல்களாக்கப் பயன்படுத்துவோம்.


எனவே, துறைசார் அறிஞர்கள் சிலரை இணைத்து மதிப்பீட்டுக் குழு ஒன்றை உருவாக்கி, அவர்களின் தெரிவாகத் தொகுக்கப்படும் பதிவுகளையே மின்நூலாக்க உள்ளோம். இதன்படிக்குச் சிறந்த பதிவுகளை வழங்கி, தெரிவுக் குழுவிற்கு ஒத்துழைத்து, பயன்மிக்க அறிவூட்டல் மின்நூல்களை வெளியிட ஒத்துழைப்புத் தருவீர்கள் என நம்புகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நல்லது, கெட்டது எதுவானாலும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவும்.