வெள்ளி, 14 ஏப்ரல், 2017

உலகின் முதன் மொழி தமிழாகுமா?

மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017 (https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html) என்ற பதிவில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிட இருப்பதாகவும் அதற்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடையே கேட்டிருந்தோம்.

உடனுக்குடன் மூன்று அறிஞர்கள் பதிவுகளை அனுப்பி எமக்கு ஊக்கமளித்துள்ளனர். அறிஞர்கள் சிலர் சித்திரை முப்பதிற்குள் அனுப்பி வைப்பதாகக் கூறி எம்மை ஆற்றுப்படுத்தியுள்ளனர்.

சுமேரிய மொழியா? வட மொழியா? தமிழ் மொழியா? உலகில் முதலில் தோன்றியது எனப் பட்டிமன்றம், வழக்காடு மன்றம் நடத்துவோரும் நம் மத்தியில் இருக்கலாம். அவர்களுக்காக உலகின் முதன் மொழி தமிழென்று சொல்லிவைக்கக் கீழ்வரும் இணைப்புகளைப் பொறுக்கித் தந்துள்ளேன்.


மேற்காணும் இணைப்புகளைச் சொடுக்கிப் பார்த்து உறுதிப்படுத்திய பின், தமிழ் இலக்கிய எடுத்துக்காட்டுகளை முன்வைத்து "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலுக்கான பதிவை எழுதித் தங்கள் வலைப்பூவில் பதிந்த பின்னர் அதன் இணைப்பை எமக்கு அனுப்பி வைத்து உதவுங்கள். மேலதிகத் தகவலுக்கு: https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html