செவ்வாய், 17 ஏப்ரல், 2018

2018-4 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்


வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - part-2" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான கட்டுரைகளை வலைப்பதிவர்களிடம் இருந்து 31/07/2021 இற்கு முன்னதாக எதிர்பார்க்கின்றோம்.கீழுள்ள ஒளிஒலி (Video) பதிவில் உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி என்று சொல்லப்படுகிறது. சற்றுக் கவனித்த பின் தங்கள் கட்டுரைகளை ஆக்குங்கள்.


நாம் ஏற்கனவே "உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - part-1" என்ற நூலை வெளியிட்டுவிட்டோம். அதன் தொடராக இந்நூல் அமைய இருப்பதால், அவற்றைப் பதிவிறக்கிப் படித்த பின் சிறந்த கட்டுரைகளை ஆக்கி எமது தளத்தில் இணைக்கலாம்.
.
கட்டுரைகளை இணைக்க வேண்டிய தளம்: http://tev-zine.forumta.net/ (இத்தளத்தில் பயனர் பெயர், கடவுச் சொல் மற்றும் தங்களைப் பற்றிய தகவல் (Profile) வழங்கி இணையவும். குறித்த மின்நூலில் தங்களை அறிமுகப்படுத்த அதுவே பயன்படும்.) மின்னஞ்சலில் கட்டுரைகளை அனுப்பினால் ஏற்றுக்கொள்ள முடியாது.
முடிவு நாள்: 31/07/2021
வெளியிடுவோர்: யாழ்பாவாணன் வெளியீட்டகம்
மின்நூல் வெளியீடு: 28/09/2021
மீளவும் கால நீடிப்புச் செய்துள்ளோம்.

"License: Creative Commons Attribution-ShareAlike 4.0 International உரிமம் – கிரியேட்டிவ் கொமன்ஸ் காரணமறிவு - எல்லோரும் படிக்கலாம்; பகிரலாம்." என்ற உடன்பாட்டின் படி யாழ்பாவாணன் வெளியீட்டகம் "உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - part-2" என்ற அன்பளிப்பு (இலவச) மின்நூலை வெளியிடும். எனவே, விரைவாக 
http://tev-zine.forumta.net/ என்ற தளத்தில் இணைந்து தங்கள் கட்டுரைகளை இணைக்கவும்.

உலகில் முதலில் தோன்றியது தமிழே என்று சிறப்பாகச் சான்றுப்படுத்தும் கட்டுரை ஒவ்வொன்றுக்கும் 10 டொலர் பெறுமதியான நூல்கள், Dicovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் வாங்க வெகுமதிச் சான்றிதழ் (Gift Certificates) ஒவ்வொருவருக்கும் தனித்தனியே வழங்கப்படும். 

"உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - part-2" என்ற தலைப்பிலான மின்நூலில் சேர்த்துக்கொள்ள இயலாத கட்டுரைகள் பிறிதொரு தலைப்பிலான மின்நூலாக வெளியிட உள்ளோம். அவற்றிற்குப் பரிசில் வழங்கப்படமாட்டாது.. இம்மின்நூல் வெளியீட்டிற்கான பரிசில்களை 20/10/2021 இற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படும்.

எமது பணிக்கு உதவ விரும்பும் கொடையாளிகள், தங்கள் விளம்பரங்களை வழங்கி உதவலாம். பின் அட்டை: 30 அமெ.டொலர், பின் உள் அட்டை: 20அமெ.டொலர். பணத்தைப் PayPal ஊடாகச் செலுத்த முடியும். விளம்பரம் A5 தாளில் all margin: 0.5inch ஆக இருக்க .jpg or .gif file ஆகப் படமாக அனுப்ப வேண்டும். விளம்பரம் வழங்க விரும்புவோர் wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு 31/07/2021 இற்கு முன்னதாகத் தொடர்புகொள்ள வேண்டும்.

உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.
தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி,
யாழ்பாவாணன் வெளியீட்டகம்.

2018-3 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்


வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "புகைத்தல் உயிரைக் குடிக்கும்" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து 31/05/2021 இற்கு முன்னதாக எதிர்பார்க்கின்றோம்.

படத்திற்குக் கவிதை எழுதுங்கள்


படத்தைப் பார்த்தீர்களா? பொது இடத்தில புகைத்த பின் வீசிய அடிக் கட்டைகள் அதிகமாக விதைக்கப்பட்டிருக்கிறது. இப்பவெல்லாம் இளசுகள் (ஆண், பெண்) புகைப்பதை எங்கும் காணலாம். புகைத்தல் சுருட்டில் "கேரளா கஞ்சா" தூளையும் கலந்து புகைக்கிறார்களாம். இந்த நஞ்சுப் பழக்க வழக்கங்களைத் தமிழ் பண்பாட்டிலிருந்து விரட்ட வேண்டும். இந்தப் பணியை மேற்கொள்ளப் பாவலர்கள்/கவிஞர்கள் ஆகிய நீங்கள், உங்கள் பாத்திறம் /கவியாற்றல் மூலம் நல்ல தீர்வினை முன்வையுங்கள் பார்ப்போம்.

தலைப்பு: புகைத்தல் உயிரைக் குடிக்கும்
பரிசு: 500INR பெறுமதியான பொத்தகங்கள்
வசதி: மின்நூலாக்கி வெளியிடுவோம்
கட்டுப்பாடு: 10-20 வரிகளில் மரபுக் கவிதை / புதுக் கவிதை. கவிதைகளை இணைக்க வேண்டிய தளம்: http://tev-zine.forumta.net/ (இத்தளத்தில் பயனர் பெயர், கடவுச் சொல் மற்றும் தங்களைப் பற்றிய தகவல் (Profile) வழங்கி இணையவும். குறித்த மின்நூலில் தங்களை அறிமுகப்படுத்த அதுவே பயன்படும்.) மின்னஞ்சலில் கவிதைகளை அனுப்பினால் ஏற்றுக்கொள்ள முடியாது.
முடிவு நாள்: 31/05/2021
வெளியிடுவோர்: யாழ்பாவாணன் வெளியீட்டகம்
மின்நூல் வெளியீடு: 30/06/2021
மீளவும் கால நீடிப்புச் செய்துள்ளோம்.

"License: Creative Commons Attribution-ShareAlike 4.0 International உரிமம் – கிரியேட்டிவ் கொமன்ஸ் காரணமறிவு - எல்லோரும் படிக்கலாம்; பகிரலாம்." என்ற உடன்பாட்டின் படி யாழ்பாவாணன் வெளியீட்டகம் "புகைத்தல் உயிரைக் குடிக்கும்" என்ற அன்பளிப்பு (இலவச) மின்நூலை வெளியிடும். எனவே, விரைவாக http://tev-zine.forumta.net/ என்ற தளத்தில் இணைந்து தங்கள் கவிதைகளை இணைக்கவும்.

சிறந்த மூன்று பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம். Dicovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் இந்திய உரூபா 500/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான வெகுமதித் தாள்கள் (Gift Certificates) பரிசு பெறும் மூவருக்கும் தனித்தனியே வழங்கப்படும். இம்மின்நூல் வெளியீட்டிற்கான பரிசில்களை 15/07/2021 இற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படும்.

எமது பணிக்கு உதவ விரும்பும் கொடையாளிகள், தங்கள் விளம்பரங்களை வழங்கி உதவலாம். பின் அட்டை: 30 அமெ.டொலர், பின் உள் அட்டை: 20அமெ.டொலர். பணத்தைப் PayPal ஊடாகச் செலுத்த முடியும். விளம்பரம் A5 தாளில் all margin: 0.5inch ஆக இருக்க .jpg or .gif file ஆகப் படமாக அனுப்ப வேண்டும். விளம்பரம் வழங்க விரும்புவோர் wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு 31/05/2021 இற்கு முன்னதாகத் தொடர்புகொள்ள வேண்டும்.

உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.
தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி,
யாழ்பாவாணன் வெளியீட்டகம்.

தமிழ் இலக்கிய வழி - மின் இதழுக்கான பதிவுகளை இணையுங்கள்!தமிழ் இலக்கியங்களில் இருந்தும் தமிழ் இலக்கியமாகவும் தமிழ் பேசும் உள்ளங்களை ஆற்றுப்படுத்தும் வழிகாட்டலும் மதியுரையும் திரட்டப்பட்டு மின் இதழாக வெளியிட எண்ணியுள்ளோம். அதற்கு இலகுவாக http://tev-zine.forumta.net/ என்ற கருத்துக் களத்தை ஆக்கியுள்ளோம். இதில் பத்துத் தலைப்புகள் தரப்பட்டுள்ளன. படித்தறிவு, பட்டறிவு, மற்றும் துறைசார் ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் பதிவுகளை தாங்கள் விரும்பிய தலைப்பின் கீழ் இணைக்கலாம்.

சங்ககால இலக்கிய வழிகாட்டல்கள்
அறிஞர்களின் வழிகாட்டல் கருத்துகள் (சிந்தனைகள்)
நகைச்சுவை ஊடாகவும் வழிகாட்டலாம்.
கடுகுக் கதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.
பாக்கள்/ கவிதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.
கல்வி, தொழில் வழிகாட்டலும் மதியுரையும்
மருத்துவ வழிகாட்டலும் மதியுரையும்
மெய்யியல் வழிகாட்டலும் மதியுரையும்
உளவியல் வழிகாட்டலும் மதியுரையும்
ஆளணி வளம் (மனித வளம்) மேம்பாடும் பேணுகையும்

தாங்கள் "யாம் பெற்ற கல்வி இவ்வையகமும் பெற வேண்டும்" என்பதற்கேற்பத் தங்கள் உள்ளத்தைத் தொட்டுணர்ந்து நமது நாளைய வழித்தோன்றல்களுக்குக் கூறும் வழிகாட்டல்களை மேற்படி தலைப்புகளின் கீழ் இணைக்கலாம். பாவலர், கதாசிரியர், கட்டுரையாசிரியர் எனத் தனியாளுமை அல்லது பல்துறை ஆளுமை கொண்ட தாங்கள், தங்கள் வழிகாட்டலையும் மதியுரையையும் விரும்பிய தலைப்பின் கீழ் இணைக்கலாம். ஒன்றிற்கு மேற்பட்ட தலைப்பின் கீழும் இணைக்கலாம். 

தங்கள் பதிவுகளை இணைக்க வேண்டிய தளம்: 
இத்தளத்தில் பயனர் பெயர், கடவுச் சொல் மற்றும் தங்களைப் பற்றிய தகவல் (Profile) வழங்கி இணையவும். குறித்த மின்இதழில் தங்களை அறிமுகப்படுத்த அதுவே பயன்படும்.

"License: Creative Commons Attribution-ShareAlike 4.0 International உரிமம் – கிரியேட்டிவ் கொமன்ஸ் காரணமறிவு - எல்லோரும் படிக்கலாம்; பகிரலாம்." என்ற உடன்பாட்டின் படி யாழ்பாவாணன் வெளியீட்டகம் "தமிழ் இலக்கிய வழி" என்ற காலாண்டு அன்பளிப்பு (இலவச) மின்இதழை வெளியிடும். எனவே, விரைவாக http://tev-zine.forumta.net/ என்ற தளத்தில் இணைந்து தங்கள் பதிவுகளை இணைக்கவும்.

வெளிவரும் ஒவ்வொரு மின்இதழிலும் தெரிவு செய்யப்படும் சிறந்த வழிகாட்டலும் மதியுரையும் கொண்ட 3 அல்லது 5 பதிவிற்குப் பரிசில் வழங்குவோம். பரிசில்களாக நூல்களை Dicovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் வாங்க வெகுமதிச் சான்றிதழ் (Gift Certificates) ஒவ்வொருவருக்கும் தனித்தனியே வழங்கப்படும். அதேவேளை யாழ்ப்பாணம், பூபாலசிங்கம் புத்தகசாலையிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோரும் 
http://tev-zine.forumta.net/ என்ற கருத்துக் களத்தில் இணைந்து நாளைய வழித்தோன்றல்களுக்கு நல்ல வழிகாட்டலும் மதியுரையும் வழங்க முன்வருமாறு பணிவோடு அழைக்கின்றோம்.

உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.
தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி,
யாழ்பாவாணன் வெளியீட்டகம்.