மின்நூல்களின் தலைப்புகள்

எமது மின்நூல்களின் தலைப்புகள் எப்படி இருக்கலாம்?

"நாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்" என மூன்று தொகுதியாக வெளியிடவுள்ளோம்.
1. உலகெங்கும் நற்றமிழைப் பேணவும் தமிழர் அடையாளங்களை நிறுவவும் நல்லறிவைப் பகிரவும் என முதல் வகை.

2. கணினி வழி, இணைய வழி உலகெங்கும் நற்றமிழைப் பேண மற்றும் வலைப்பதிவர்கள்/ படைப்பாளிகள் பயிற்சி பெற என இரண்டாம் வகை.

3. தமிழர் நோயின்றி நெடுநாள் வாழ, தன்னம்பிக்கையோடு ஒற்றுமையாக வாழ என மூன்றாம் வகை.

முதல் வகை தமிழைப் பேணவும் இரண்டாம் வகை தமிழைப் பரப்பவும் மூன்றாம் வகை தமிழர் வாழ்நாளை நீடிக்கவும் என்ற நோக்கோடு எமது மின்நூல்களை வெளியிட எண்ணியுள்ளோம்.

முதல் வகையில் தமிழின் தொன்மை, தமிழ் வரலாறு, தமிழரின் கலைகள், தமிழரின் பண்பாடு, உலகெங்கும் தமிழரின் அடையாளங்கள், மற்றும் நாளைய வழித்தோன்றல்கள் தமிழைப் பேண உதவும் வகையில் மின்நூல்கள் தேவை. அதற்கேற்ப மின்நூல்களின் தலைப்புகள் அமையலாம்.

இரண்டாம் வகையில் நடப்புக் கால இலத்திரனியல் நுட்பங்களுடன் தமிழ் மொழி மூல வெளியீடு, கணினி மற்றும் நடைபேசி வழி தமிழ் மொழி மூல வெளியீடு, இணைய வழி தமிழ் மொழி மூல வெளியீடு, மேலும் இவ்வூடகங்களினூடாக உலகெங்கும் நற்றமிழைப் பேணும் வெளியீடுகளை ஆக்கக்கூடிய வலைப்பதிவர்களுக்கு/ படைப்பாளிகளுக்கு பயிற்சி தரக்கூடிய வகையில் மின்நூல்கள் தேவை. அதற்கேற்ப மின்நூல்களின் தலைப்புகள் அமையலாம்.

மூன்றாம் வகையில் உலகெங்கும் நற்றமிழைப் பேண நம்மாளுங்க நெடுநாள் வாழ, நமது வழித்தோன்றலைப் பெருக்குவதோடு குழந்தை நலம், கல்வி, தொழில், குடும்ப நலம் என வாழ்க்கையில் தேவைப்படும் அறிவைப் பெற உதவும் வகையில் மின்நூல்கள் தேவை. அதற்கேற்ப மின்நூல்களின் தலைப்புகள் அமையலாம்.

மின்நூல்களுக்கான தலைப்புகளை அறிஞர்களிடம் இருந்தும் எதிர்பார்க்கின்றோம். மின்நூல்களுக்கான தலைப்பை வழங்கும் போது, அந்நூல் கொண்டிருக்கக்கூடிய உள்ளடக்கங்கள் பற்றியும் சுருக்கமாகத் தந்தால் நாம் அதற்கான பதிவுகளைத் திரட்டித் தொகுக்க முடியும். அதாவது, பல துறை அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டிப் பயன்தரும் நோக்கில் மின்நூல்களாக்கி வெளியிடத் தங்களது வழிகாட்டலையும் மதியுரையையும் எதிர்பார்க்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நல்லது, கெட்டது எதுவானாலும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவும்.