ஞாயிறு, 25 டிசம்பர், 2022

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

கவிதை அரங்கேறும் நேரத்தில் இணையுங்கள்


மேற்படி மீம்ஸ்ஸை வைத்து முகநூலில் "கவிதை அரங்கேறும் நேரம்" குழுவினால்  கவிதைப் போட்டி நடாத்தப்படுகிறது. முடிவுத் திகதி: 17-04-2022. 

கவிதைகள் மின்நூலாக வெளியிடப்படும்.

மின்சான்றிதழ் வழங்கப்படும்

Microsoft Teams செயலி வழியாக சிறந்த கவிதைகளை வாசிக்க அழைப்போம்.

காணொளி YouGTube ஊடாக வெளிவரும்.

நீங்களும் பங்கு பற்றலாமே!

தகவல்; யாழ்பாவாணன் வெளியீட்டகம்

திங்கள், 8 பிப்ரவரி, 2021

இது தான் காதலா? - மின்நூல் வெளியீடு

 
அன்பிற்கினிய வலைவழி உறவுகளே!

வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக மின்நூல்களை வெளியிட முன்வந்திருக்கிறது. இவற்றை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாகப் (இலவசமாகப்) பகிரவுள்ளோம். "2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்" என்னும் முயற்சியில் "இது தான் காதலா?" என்ற மின்நூலை வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம். இருப்பினும் 2019 - 2020 காலப் பகுதியில் எமது பணி விரைவாக இடம்பெறாமையால் இம்மின்நூல் காலம் கடந்து வெளிவருகின்றது. 2021 இல் தங்கள் ஒத்துழைப்புடன் எமது பணியை விரைவாக மேற்கொள்வோம் என்பதை மகிழ்வோடு தெரிவிக்கின்றோம்.

மேற்காணும் மின்நூலில் பல அறிஞர்கள் தமது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளனர். இலங்கை, யாழ்ப்பாணத்தின் சிறந்த படைப்பாளிகள் இருவர் இம்மின்நூலின் பதிவுகளைச் சிறப்பாக எடைபோட்டிருக்கிறார்கள். வாசகர் உள்ளங்களில் நல்லுரையாக அவை இருக்கும். வாசகர் உள்ளங்களில் "மனிதவொழுக்கம் மீறப்படாத இயல்பான காதலை ஏற்கலாம்!" என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தால் தான் இம்மின்நூலுக்கு வெற்றி என்போம்.

விரைவாக வழமையாகப் பார்வையிடப் பதிவிறக்க

https://app.box.com/s/o12ens7bcqhg7mg9ux7uzdmzhl0mq11w

 

 

இலகுவாகக் குளிர்மையாகப் பார்வையிடப் பதிவிறக்க

https://issuu.com/ypvn/docs/ithu_thaan_kaathala


இந்த மின்நூலில் அறிஞர்கள் வெளிப்படுத்திய எண்ணங்களைப் பரப்புவதன் ஊடாக விழிப்புணர்வை ஏற்படுத்த இயலும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் பல நண்பர்கள் ஊடாக இந்த மின்நூலை உலகெங்கும் பரப்ப முயலுவோம். இந்த மின்நூலில் மூன்று சிறந்த பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம்.

 

தமிழரும் காதலும்... (22 வரிகள்) (யோகராஜா முரளிதரன்)

இது தான் காதலா1 (24 வரிகள்)  (ஹிஷாலி, சென்னை - 42)

இது தான் காதலா? (17 வரிகள்) (வேலணையூர் ரஜிந்தன்.)

 

Dicovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் இந்திய உரூபா 500/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான வெகுமதித் தாள்கள் (Gift Certificates) அல்லது யாழ்ப்பாணம், பூபாலசிங்கம் புத்தகசாலையில் இலங்கை உரூபா (500inr x 2.3%) 1150/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான வெகுமதித் தாள்கள் (Gift Certificates) பரிசு பெறும் மூவருக்கும் தனித்தனியே அனுப்பி வைக்கப்படும்.

 

உங்களுக்காகக் கால நீடிப்புச் செய்துள்ளோம்.

 

மேற்காணும் மின்நூலில் வெற்றி பெற்றோரை வாழ்த்துவதோடு, அடுத்த போட்டியில் நீங்களும் பங்குபற்றி வெல்ல அழைக்கின்றோம்! அதற்கேற்பக் கீழ்வரும் எமது முயற்சிகளுக்குக் கால நீடிப்புச் செய்துள்ளோம். அதற்கான பதிவுகளை எமது சிறப்புத் தளத்தில் பதிவு செய்யலாம். பதிவுகளை இணைப்போருக்குப் பரிசில் வழங்குகின்றோம்.

 

https://seebooks4u.blogspot.com/2019/04/2019.html

2019 - சித்திரைப் புத்தாண்டையொட்டி - மரபுக் கவிதை எழுதும் போட்டி - கால நீடிப்பைப் பயன்படுத்தி உங்கள் பதிவுகளை இணையுங்கள்.

 

https://seebooks4u.blogspot.com/2018/04/2018-3.html

2018-3 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் - கால நீடிப்பைப் பயன்படுத்தி உங்கள் பதிவுகளை இணையுங்கள்.

 

https://seebooks4u.blogspot.com/2018/04/2018-4.html

2018-4 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் - கால நீடிப்பைப் பயன்படுத்தி உங்கள் பதிவுகளை இணையுங்கள்.

 

https://seebooks4u.blogspot.com/2018/04/blog-post.html

தமிழ் இலக்கிய வழி - மின் இதழுக்கான பதிவுகளை இணையுங்கள்!

(சங்க இலக்கிய, சமகால இலக்கிய வழிகாட்டல் பதிவுகளை மாதம் ஒரு தடவை பதிந்தால் மோதும்.)

 

உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.

திங்கள், 30 நவம்பர், 2020

கவிதை அரங்கேறும் நேரம்! - Dec2020

 

கொரோனா (COVID-19) வருகைக்குப் பின் வீட்டில் ஆள்களை அரசுகள் முடக்கிவைத்தது. நம்மாளுங்க இணைய வழியில் உலகைச் சுற்றிக்கொண்டே இருந்தாங்க. அதாவது  ZOOM, Cisco Webex, Meet.Jit.Si, Google Meet, Microsoft Teams, Lifesize, Eztalks, Teamlink எனப் பல காணொளி (ஒளிஒலி) உரையாடல் செயலி ஊடாக இணையவழிக் கருத்தரங்குகள் நடாத்தி நம்மாளுங்க தம் அறிவாற்றலைப் பகிர்ந்த வண்ணம் வாழப் பழகிட்டாங்க.

அவ்வாறான இணையவழிக் கருத்தரங்குகள் போன்றே "கவிதை அரங்கேறும் நேரம்!" என்ற நிகழ்வை நடாத்திப் பன்னாட்டுக் கவிஞர்களுக்குக் களம் அமைத்துத்தர யாழ்பாவாணன் கலைப்பணி மன்றம் முன்வருகின்றது. "தமிழரின் பலம் ஒற்றுமை தான்!" என்ற தலைப்பில் மரபுக் கவிதை அல்லது புதுக் கவிதை எதுவாயினும் மூன்று மணித்துளி (3 minute) நேரத்தில் வாசிக்கத் தக்கதாக இருக்கவேண்டும். சமகாலச் சூழலை உள்ளத்தில் இருத்தி மேற்படி தலைப்பிலான கவிதைகளை எல்லோரும் எழுதி அனுப்பலாம். முடிவு நாள் : 30/12/2020, முடிவு நாள் நீடிக்கப்பட மாட்டாது.

தங்கள் கவிதைகளை அனுப்ப விரும்புவோர் PP Size Photo, பெயர், முகவரி ஆகியவற்றுடன் wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். எல்லோரும் பங்கேற்கலாம்; எல்லோருக்கும் பகிர்ந்து உதவுங்கள். எமக்குக் கிடைத்த கவிதைகளை "யாழ்பாவாணன் வெளியீட்டகம்" ஊடாக மின்நூலாக்கி வெளியிட்டு உதவுவோம். கவிதைகள் எமக்குக் கிடைத்த ஒழுங்கில் "கவிதை அரங்கேறும் நேரம்!" என்ற நிகழ்வில் கவிஞர்களைச் சேர்த்துக்கொள்வோம். விரைவாக உங்கள் சிறந்த கவிதைகளை அனுப்பி உதவுங்கள்; பன்னாட்டுக் கவிஞர்களுடன் கவிதை வாசிக்கலாம்.

குறிப்பு:-

2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் (https://seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html) அறிவிப்பின் அறுவடையாக "இது தான் காதலா?" மின்நூல் அடுத்த வாரம் வெளிவரும்.