ஞாயிறு, 1 ஜனவரி, 2017

வாசிப்புப் போட்டி - 2016 தேர்வு மதிப்பீடு

உலகெங்கும் தமிழ் பேசும் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க, வாசிப்பு மாதமாகிய ஐப்பசி (Oct) இல் அறிவித்து நடாத்தப்பட்ட "வாசிப்புப் போட்டி - 2016" இற்கான முடிவுரையை இப்பகுதியில் தருகின்றேன். இப்போட்டி சிறந்த ஒரு படைப்பாளியை அடையாளப்படுத்தி இருக்கிறது. அதனை நாம் வெற்றியாகக் கருதுகின்றோம்.

போட்டியில் பங்குபற்றியோரில் சிறந்த பதில்களை அல்லது எமது பதில்களுக்கு இசைவான பதில்களை வழங்கிய ஒருவருக்கு மாத்திரமே பரிசில் வழங்க முடிவு எடுத்துள்ளோம். அதாவது, நிறைவாக நூல்களை வாசித்துப் பதில் தந்த அவரை மதிப்பளிக்க விரும்புகிறோம். அவரது விரிப்பைக் கீழே தருகின்றேன். இனிய வலைவழி உறவுகளே, நீங்களும் அவரை வாழ்த்தி மதிப்பளித்து உதவுமாறு வேண்டி நிற்கின்றோம். நாமும் அவருக்கு 20 அமெரிக்க டொலர் பணப் பரிசினை 2017 பொங்கல் நாளன்று PayPal ஊடாகக் கிடைக்க ஒழுங்கு செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம்.

வாசிப்புப் போட்டி - 2016 இன் வெற்றியாளர்
சொந்தப் பெயர் - த.அபிநயா
முகவரி
பழைய எண் 50, புது எண் 84, கப்பல் போலு தெரு,
பழைய வண்ணாரப்பேட்டை,
சென்னை – 600021

போட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும் நூலாசிரியர்களின் பதில்களும் கீழே தருகின்றோம்.
"நீங்களும் எழுத்தாளராகலாம்" என்ற நூலில் இருந்து...
1. எழுத்துக்கலை ஏன் அவசியம்?
2. எழுத்துக்கலையின் மகிமையைக் கூறுங்கள்?
3. நீங்களும் எழுத்தாளராக முடியுமா?
"பேனா முனை" என்ற நூலில் இருந்து...
4. எழுதிய எழுத்துகள் அழியாது பேணும் தன்மைக்கு எது வேண்டும்?
5. ஊடக எழுத்தாளர்களின் வகைகள் எத்தனை?
6. எழுதிய ஆக்கத்தில் தோன்றக் கூடிய தவறுகள் எத்தனை?
"பாவலர் ஆகலாம்" என்ற நூலில் இருந்து...
7. கவிதை என்றால் என்ன?
8. புதுக்கவிதை இலக்கணம் எப்படி இருக்கும்?
"கட்டுரை எழுதுவது எப்படி?" என்ற நூலில் இருந்து...
9. கட்டுரை எழுதுவது எப்படி?
"சிறுகதை எழுதுவது எப்படி?" என்ற நூலில் இருந்து...
10. சிறிதாக உரைநடையில் விவரிக்கப்படுவது சிறுகதை ஆயின், அதனை எப்படிச் சொல்ல வேண்டும்?
இங்கு பயன்படுத்தப்பட்ட நூல்களைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
எமது களஞ்சியத்தில் (இணைப்பு:- http://goo.gl/mvGnw) "படைப்பாளியாக முயல்வோருக்கு" என்ற பிரிவில் (போல்டரில்) உள்ள நூல்களைப் பதிவிறக்கிப் படியுங்கள்.

இவ்வாறான 'வாசிப்புப் போட்டி - 2017' வாசிப்பு மாதமாகிய வரும் ஐப்பசி (Oct) மாதம் அறிவிக்கப்படும். இம்முறை போட்டியில் கலந்துகொள்ளத் தவறியோர், அடுத்த முறை போட்டியில் பங்குபற்றி உலகெங்கும் தமிழ் பேசும் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க இணையுமாறு பணிவோடு அழைக்கின்றோம்.

யாழ்பாவாணன் வெளியீட்டகம்
யாழ் மென்பொருள் தீர்வுகள்