போட்டி பற்றிய ஒழுக்க நெறியைக்
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கலாம்.
பலரது வேண்டுதலுக்கு இணங்கப்
பத்துத் தேர்வுக் கேள்விகள் தரப்படுகிறது. பொத்தகங்களைப் படித்தும் பதிலைத் தயாரித்து
அனுப்பலாம். விடைகள் 48 மணி நேரம் கழித்து இத்தளத்தில் வெளியிடப்படும்.
"நீங்களும்
எழுத்தாளராகலாம்" என்ற நூலில் இருந்து...
1. எழுத்துக்கலை ஏன்
அவசியம்?
2. எழுத்துக்கலையின்
மகிமையைக் கூறுங்கள்?
3. நீங்களும்
எழுத்தாளராக முடியுமா?
"பேனா முனை"
என்ற நூலில் இருந்து...
4. எழுதிய எழுத்துகள்
அழியாது பேணும் தன்மைக்கு எது வேண்டும்?
5. ஊடக
எழுத்தாளர்களின் வகைகள் எத்தனை?
6. எழுதிய ஆக்கத்தில்
தோன்றக் கூடிய தவறுகள் எத்தனை?
"பாவலர்
ஆகலாம்" என்ற நூலில் இருந்து...
7. கவிதை என்றால்
என்ன?
8. புதுக்கவிதை
இலக்கணம் எப்படி இருக்கும்?
"கட்டுரை எழுதுவது
எப்படி?" என்ற நூலில் இருந்து...
9. கட்டுரை எழுதுவது
எப்படி?
"சிறுகதை
எழுதுவது எப்படி?" என்ற நூலில் இருந்து...
10. சிறிதாக
உரைநடையில் விவரிக்கப்படுவது சிறுகதை ஆயின், அதனை எப்படிச் சொல்ல வேண்டும்?
தேர்வுக் கேள்விகளுக்குப்
பதிலளிக்க, எமது களஞ்சியத்தில் (இணைப்பு:- http://goo.gl/mvGnw) "படைப்பாளியாக
முயல்வோருக்கு" என்ற பிரிவில் (போல்டரில்) உள்ள நூல்களைப் பதிவிறக்கிப் படியுங்கள்.
இன்று நள்ளிரவுடன் இத்தேர்வுக் கேள்விகள் மறைக்கப்பட்டுவிடும்.
இதற்கான விடைகளை 48 மணி நேரத்திற்குள்
yarlpavanang1@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு subject இல் "வாசிப்புப் போட்டி
- 2016" எனத் தட்டச்சுச் செய்து, கேள்விகளுக்கான சரியான பதில், போட்டியாளரின்
சொந்தப் பெயர், முகவரி, PAYPAL/ WALLET கணக்கிற்கான மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை அனுப்பவும்.
போட்டியில் பங்குபற்றி
வெற்றி பெற வாழ்த்துகள்!