நூல் வெளியீடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் வெளியீடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 பிப்ரவரி, 2021

இது தான் காதலா? - மின்நூல் வெளியீடு

 
அன்பிற்கினிய வலைவழி உறவுகளே!

வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக மின்நூல்களை வெளியிட முன்வந்திருக்கிறது. இவற்றை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாகப் (இலவசமாகப்) பகிரவுள்ளோம். "2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்" என்னும் முயற்சியில் "இது தான் காதலா?" என்ற மின்நூலை வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம். இருப்பினும் 2019 - 2020 காலப் பகுதியில் எமது பணி விரைவாக இடம்பெறாமையால் இம்மின்நூல் காலம் கடந்து வெளிவருகின்றது. 2021 இல் தங்கள் ஒத்துழைப்புடன் எமது பணியை விரைவாக மேற்கொள்வோம் என்பதை மகிழ்வோடு தெரிவிக்கின்றோம்.

மேற்காணும் மின்நூலில் பல அறிஞர்கள் தமது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளனர். இலங்கை, யாழ்ப்பாணத்தின் சிறந்த படைப்பாளிகள் இருவர் இம்மின்நூலின் பதிவுகளைச் சிறப்பாக எடைபோட்டிருக்கிறார்கள். வாசகர் உள்ளங்களில் நல்லுரையாக அவை இருக்கும். வாசகர் உள்ளங்களில் "மனிதவொழுக்கம் மீறப்படாத இயல்பான காதலை ஏற்கலாம்!" என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தால் தான் இம்மின்நூலுக்கு வெற்றி என்போம்.

விரைவாக வழமையாகப் பார்வையிடப் பதிவிறக்க

https://app.box.com/s/o12ens7bcqhg7mg9ux7uzdmzhl0mq11w

 

 

இலகுவாகக் குளிர்மையாகப் பார்வையிடப் பதிவிறக்க

https://issuu.com/ypvn/docs/ithu_thaan_kaathala


இந்த மின்நூலில் அறிஞர்கள் வெளிப்படுத்திய எண்ணங்களைப் பரப்புவதன் ஊடாக விழிப்புணர்வை ஏற்படுத்த இயலும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் பல நண்பர்கள் ஊடாக இந்த மின்நூலை உலகெங்கும் பரப்ப முயலுவோம். இந்த மின்நூலில் மூன்று சிறந்த பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம்.

 

தமிழரும் காதலும்... (22 வரிகள்) (யோகராஜா முரளிதரன்)

இது தான் காதலா1 (24 வரிகள்)  (ஹிஷாலி, சென்னை - 42)

இது தான் காதலா? (17 வரிகள்) (வேலணையூர் ரஜிந்தன்.)

 

Dicovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் இந்திய உரூபா 500/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான வெகுமதித் தாள்கள் (Gift Certificates) அல்லது யாழ்ப்பாணம், பூபாலசிங்கம் புத்தகசாலையில் இலங்கை உரூபா (500inr x 2.3%) 1150/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான வெகுமதித் தாள்கள் (Gift Certificates) பரிசு பெறும் மூவருக்கும் தனித்தனியே அனுப்பி வைக்கப்படும்.

 

உங்களுக்காகக் கால நீடிப்புச் செய்துள்ளோம்.

 

மேற்காணும் மின்நூலில் வெற்றி பெற்றோரை வாழ்த்துவதோடு, அடுத்த போட்டியில் நீங்களும் பங்குபற்றி வெல்ல அழைக்கின்றோம்! அதற்கேற்பக் கீழ்வரும் எமது முயற்சிகளுக்குக் கால நீடிப்புச் செய்துள்ளோம். அதற்கான பதிவுகளை எமது சிறப்புத் தளத்தில் பதிவு செய்யலாம். பதிவுகளை இணைப்போருக்குப் பரிசில் வழங்குகின்றோம்.

 

https://seebooks4u.blogspot.com/2019/04/2019.html

2019 - சித்திரைப் புத்தாண்டையொட்டி - மரபுக் கவிதை எழுதும் போட்டி - கால நீடிப்பைப் பயன்படுத்தி உங்கள் பதிவுகளை இணையுங்கள்.

 

https://seebooks4u.blogspot.com/2018/04/2018-3.html

2018-3 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் - கால நீடிப்பைப் பயன்படுத்தி உங்கள் பதிவுகளை இணையுங்கள்.

 

https://seebooks4u.blogspot.com/2018/04/2018-4.html

2018-4 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் - கால நீடிப்பைப் பயன்படுத்தி உங்கள் பதிவுகளை இணையுங்கள்.

 

https://seebooks4u.blogspot.com/2018/04/blog-post.html

தமிழ் இலக்கிய வழி - மின் இதழுக்கான பதிவுகளை இணையுங்கள்!

(சங்க இலக்கிய, சமகால இலக்கிய வழிகாட்டல் பதிவுகளை மாதம் ஒரு தடவை பதிந்தால் மோதும்.)

 

உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

2018-4 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்


வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - part-2" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான கட்டுரைகளை வலைப்பதிவர்களிடம் இருந்து 31/07/2021 இற்கு முன்னதாக எதிர்பார்க்கின்றோம்.



கீழுள்ள ஒளிஒலி (Video) பதிவில் உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி என்று சொல்லப்படுகிறது. சற்றுக் கவனித்த பின் தங்கள் கட்டுரைகளை ஆக்குங்கள்.


நாம் ஏற்கனவே "உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - part-1" என்ற நூலை வெளியிட்டுவிட்டோம். அதன் தொடராக இந்நூல் அமைய இருப்பதால், அவற்றைப் பதிவிறக்கிப் படித்த பின் சிறந்த கட்டுரைகளை ஆக்கி எமது தளத்தில் இணைக்கலாம்.
.
கட்டுரைகளை இணைக்க வேண்டிய தளம்: http://tev-zine.forumta.net/ (இத்தளத்தில் பயனர் பெயர், கடவுச் சொல் மற்றும் தங்களைப் பற்றிய தகவல் (Profile) வழங்கி இணையவும். குறித்த மின்நூலில் தங்களை அறிமுகப்படுத்த அதுவே பயன்படும்.) மின்னஞ்சலில் கட்டுரைகளை அனுப்பினால் ஏற்றுக்கொள்ள முடியாது.
முடிவு நாள்: 31/07/2021
வெளியிடுவோர்: யாழ்பாவாணன் வெளியீட்டகம்
மின்நூல் வெளியீடு: 28/09/2021
மீளவும் கால நீடிப்புச் செய்துள்ளோம்.

"License: Creative Commons Attribution-ShareAlike 4.0 International உரிமம் – கிரியேட்டிவ் கொமன்ஸ் காரணமறிவு - எல்லோரும் படிக்கலாம்; பகிரலாம்." என்ற உடன்பாட்டின் படி யாழ்பாவாணன் வெளியீட்டகம் "உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - part-2" என்ற அன்பளிப்பு (இலவச) மின்நூலை வெளியிடும். எனவே, விரைவாக 
http://tev-zine.forumta.net/ என்ற தளத்தில் இணைந்து தங்கள் கட்டுரைகளை இணைக்கவும்.

உலகில் முதலில் தோன்றியது தமிழே என்று சிறப்பாகச் சான்றுப்படுத்தும் கட்டுரை ஒவ்வொன்றுக்கும் 10 டொலர் பெறுமதியான நூல்கள், Dicovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் வாங்க வெகுமதிச் சான்றிதழ் (Gift Certificates) ஒவ்வொருவருக்கும் தனித்தனியே வழங்கப்படும். 

"உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - part-2" என்ற தலைப்பிலான மின்நூலில் சேர்த்துக்கொள்ள இயலாத கட்டுரைகள் பிறிதொரு தலைப்பிலான மின்நூலாக வெளியிட உள்ளோம். அவற்றிற்குப் பரிசில் வழங்கப்படமாட்டாது.. இம்மின்நூல் வெளியீட்டிற்கான பரிசில்களை 20/10/2021 இற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படும்.

எமது பணிக்கு உதவ விரும்பும் கொடையாளிகள், தங்கள் விளம்பரங்களை வழங்கி உதவலாம். பின் அட்டை: 30 அமெ.டொலர், பின் உள் அட்டை: 20அமெ.டொலர். பணத்தைப் PayPal ஊடாகச் செலுத்த முடியும். விளம்பரம் A5 தாளில் all margin: 0.5inch ஆக இருக்க .jpg or .gif file ஆகப் படமாக அனுப்ப வேண்டும். விளம்பரம் வழங்க விரும்புவோர் wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு 31/07/2021 இற்கு முன்னதாகத் தொடர்புகொள்ள வேண்டும்.

உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.
தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி,
யாழ்பாவாணன் வெளியீட்டகம்.

2018-3 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்


வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "புகைத்தல் உயிரைக் குடிக்கும்" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து 31/05/2021 இற்கு முன்னதாக எதிர்பார்க்கின்றோம்.

படத்திற்குக் கவிதை எழுதுங்கள்


படத்தைப் பார்த்தீர்களா? பொது இடத்தில புகைத்த பின் வீசிய அடிக் கட்டைகள் அதிகமாக விதைக்கப்பட்டிருக்கிறது. இப்பவெல்லாம் இளசுகள் (ஆண், பெண்) புகைப்பதை எங்கும் காணலாம். புகைத்தல் சுருட்டில் "கேரளா கஞ்சா" தூளையும் கலந்து புகைக்கிறார்களாம். இந்த நஞ்சுப் பழக்க வழக்கங்களைத் தமிழ் பண்பாட்டிலிருந்து விரட்ட வேண்டும். இந்தப் பணியை மேற்கொள்ளப் பாவலர்கள்/கவிஞர்கள் ஆகிய நீங்கள், உங்கள் பாத்திறம் /கவியாற்றல் மூலம் நல்ல தீர்வினை முன்வையுங்கள் பார்ப்போம்.

தலைப்பு: புகைத்தல் உயிரைக் குடிக்கும்
பரிசு: 500INR பெறுமதியான பொத்தகங்கள்
வசதி: மின்நூலாக்கி வெளியிடுவோம்
கட்டுப்பாடு: 10-20 வரிகளில் மரபுக் கவிதை / புதுக் கவிதை. கவிதைகளை இணைக்க வேண்டிய தளம்: http://tev-zine.forumta.net/ (இத்தளத்தில் பயனர் பெயர், கடவுச் சொல் மற்றும் தங்களைப் பற்றிய தகவல் (Profile) வழங்கி இணையவும். குறித்த மின்நூலில் தங்களை அறிமுகப்படுத்த அதுவே பயன்படும்.) மின்னஞ்சலில் கவிதைகளை அனுப்பினால் ஏற்றுக்கொள்ள முடியாது.
முடிவு நாள்: 31/05/2021
வெளியிடுவோர்: யாழ்பாவாணன் வெளியீட்டகம்
மின்நூல் வெளியீடு: 30/06/2021
மீளவும் கால நீடிப்புச் செய்துள்ளோம்.

"License: Creative Commons Attribution-ShareAlike 4.0 International உரிமம் – கிரியேட்டிவ் கொமன்ஸ் காரணமறிவு - எல்லோரும் படிக்கலாம்; பகிரலாம்." என்ற உடன்பாட்டின் படி யாழ்பாவாணன் வெளியீட்டகம் "புகைத்தல் உயிரைக் குடிக்கும்" என்ற அன்பளிப்பு (இலவச) மின்நூலை வெளியிடும். எனவே, விரைவாக http://tev-zine.forumta.net/ என்ற தளத்தில் இணைந்து தங்கள் கவிதைகளை இணைக்கவும்.

சிறந்த மூன்று பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம். Dicovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் இந்திய உரூபா 500/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான வெகுமதித் தாள்கள் (Gift Certificates) பரிசு பெறும் மூவருக்கும் தனித்தனியே வழங்கப்படும். இம்மின்நூல் வெளியீட்டிற்கான பரிசில்களை 15/07/2021 இற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படும்.

எமது பணிக்கு உதவ விரும்பும் கொடையாளிகள், தங்கள் விளம்பரங்களை வழங்கி உதவலாம். பின் அட்டை: 30 அமெ.டொலர், பின் உள் அட்டை: 20அமெ.டொலர். பணத்தைப் PayPal ஊடாகச் செலுத்த முடியும். விளம்பரம் A5 தாளில் all margin: 0.5inch ஆக இருக்க .jpg or .gif file ஆகப் படமாக அனுப்ப வேண்டும். விளம்பரம் வழங்க விரும்புவோர் wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு 31/05/2021 இற்கு முன்னதாகத் தொடர்புகொள்ள வேண்டும்.

உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.
தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி,
யாழ்பாவாணன் வெளியீட்டகம்.

வியாழன், 1 மார்ச், 2018

மதுவை விரட்டினால் கோடி நன்மை! - மின்நூல் வெளியீடு


அன்பிற்கினிய வலைவழி உறவுகளே!

வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக மின்நூல்களை வெளியிட முன்வந்திருக்கிறது. இவற்றை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாகப் (இலவசமாகப்) பகிரவுள்ளோம். "2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்" என்னும் முயற்சியில் "மதுவை விரட்டினால் கோடி நன்மை!" என்ற மின்நூலை வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம்.

மேற்காணும் மின்நூலில் பல அறிஞர்கள் தமது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளனர். இலங்கை, யாழ்ப்பாணத்தில் சிறந்த இலக்கியப் படைப்பாளிகளும் மருத்துவர்களும் ஆகிய அறிஞர்களின் மதிப்புரை இம்மின்நூலின் பதிவுகளைச் சிறப்பாக எடைபோட்டிருக்கிறது. வாசகர் உள்ளங்களில் நல்லுரையாக அவை இருக்கும். வாசகர் உள்ளங்களில் "மதுவை நாடினால் சாவை நாடியதாக இருக்கும்" என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தால் தான் இம்மின்நூலுக்கு வெற்றி என்போம்.

இலகுவாகக் குளிர்மையாகப் பார்வையிடப் பதிவிறக்க

விரைவாக வழமையாகப் பார்வையிடப் பதிவிறக்க

இந்த மின்நூலில் அறிஞர்கள் வெளிப்படுத்திய எண்ணங்களைப் பரப்புவதன் ஊடாக விழிப்புணர்வை ஏற்படுத்த இயலும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் பல நண்பர்கள் ஊடாக இந்த மின்நூலை உலகெங்கும் பரப்ப முயலுவோம். இந்த மின்நூலில் மூன்று சிறந்த பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம்.

வாழ்வை வீணாக்கும் மது - சுஷ்ரூவா
மதுவும் நானும் - யோகராஜா முரளீதரன்
பயனற்ற பொருள் - தமிழ் சரண்

Dicovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் இந்திய உரூபா 500/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான வெகுமதித் தாள்கள் (Gift Certificates) பரிசு பெறும் மூவருக்கும் தனித்தனியே அனுப்பி வைக்கப்படும்.

உங்களுக்காகக் கால நீடிப்புச் செய்துள்ளோம்.

மேற்காணும் மின்நூலில் வெற்றி பெற்றோரை வாழ்த்துவதோடு, அடுத்த போட்டியில் நீங்களும் பங்குபற்றி வெல்ல அழைக்கின்றோம்! அதற்கு இலகுவாக "இது தான் காதலா?" மின்நூலிற்குப் பதிவுகளை அனுப்பக் கால நீடிப்புச் செய்துள்ளோம்.
மேலதீகத் தகவலைப் பெற
2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்

உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.

செவ்வாய், 9 ஜனவரி, 2018

2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்

வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "இது தான் காதலா?" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து 20/03/2018 இற்கு முன்னதாக எதிர்பார்க்கின்றோம்.

படத்திற்குக் கவிதை எழுதுங்கள் 

படத்தைப் பார்த்தீர்களா? நம்ம பிள்ளைகள் பூங்காக்கள் போய் காதலில் மூழ்கித் தங்களை மறந்து தவறு செய்த பின், செய்த தவறின் பரிசாகக் கிடைத்த குழந்தைகளைத் தெருவில் போட்டுச் செல்கின்றனர். இந்நிலை மேற்கத்தியப் பண்பாட்டில் இருந்து தமிழ் பண்பாட்டிற்குத் தொற்றிய நஞ்சு தான். இந்த நஞ்சுப் பழக்க வழக்கங்களைத் தமிழ் பண்பாட்டிலிருந்து விரட்ட வேண்டும். இந்தப் பணியை மேற்கொள்ளப் பாவலர்கள்/கவிஞர்கள் ஆகிய நீங்கள், உங்கள் பாத்திறம் /கவியாற்றல் மூலம் நல்ல தீர்வினை முன்வையுங்கள் பார்ப்போம்.

தலைப்பு: இது தான் காதலா?
பரிசு: 500INR பெறுமதியான பொத்தகங்கள்
வசதி: மின்நூலாக்கி வெளியிடுவோம்
கட்டுப்பாடு: 10-20 வரிகளில் மரபுக் கவிதை / புதுக் கவிதை. பின்னூட்டங்களில் வரும் கவிதைகள் ஏற்கப்படமாட்டாது.
கவிதைகள் வந்து சேரவேண்டிய முகவரி: wds0@live.com
மின்னஞ்சலுக்கான தலைப்பு (Subject): '2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்' என்றவாறு இருக்க வேண்டும்.
கவிதைகள் அனுப்புவோர்: PP Size படம், பெயர், முகவரி, முகநூல்/வலைப்பக்க முகவரி, நடைபேசி எண் ஆகியன இணைத்து அனுப்பவேண்டும். குறித்த மின்நூலில் தங்களை அறிமுகப்படுத்த அதுவே பயன்படும்.
முடிவு நாள்: 20/03/2018
வெளியிடுவோர்: யாழ்பாவாணன் வெளியீட்டகம்
மின்நூல் வெளியீடு: 15/04/2018

"License: Creative Commons Attribution-ShareAlike 4.0 International உரிமம் – கிரியேட்டிவ் கொமன்ஸ் காரணமறிவு - எல்லோரும் படிக்கலாம்; பகிரலாம்." என்ற உடன்பாட்டின் படி யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளியிடும் "இது தான் காதலா?" என்ற அன்பளிப்பு (இலவச) மின்நூலில் எனது பதிவு இடம்பெற அனுமதியளிப்பதோடு ஒத்துழைப்பு வழங்குகிறேன் எனவும் தமது சொந்தப் படைப்பென உறுதிப்படுத்தியும் தங்கள் பதிவுகளை MS-Word File ஆக Latha Unicode Font இல் தட்டச்சுச் செய்து wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு 20/03/2018 இற்கு முன்னதாக அனுப்பிவைக்க வேண்டும்.

சிறந்த மூன்று பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம். Dicovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் இந்திய உரூபா 500/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான வெகுமதித் தாள்கள் (Gift Certificates) பரிசு பெறும் மூவருக்கும் தனித்தனியே வழங்கப்படும். இம்மின்நூல் வெளியீட்டிற்கான பரிசில்களை 30/04/2018 இற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படும்.

எமது பணிக்கு உதவ விரும்பும் கொடையாளிகள், தங்கள் விளம்பரங்களை வழங்கி உதவலாம். பின் அட்டை: 30 அமெ.டொலர், பின் உள் அட்டை: 20அமெ.டொலர். பணத்தைப் PayPal ஊடாகச் செலுத்த முடியும். விளம்பரம் A5 தாளில் all margin: 0.5inch ஆக இருக்க .jpg or .gif file ஆகப் படமாக அனுப்ப வேண்டும். விளம்பரம் வழங்க விரும்புவோர் wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு 20/03/2018 இற்கு முன்னதாகத் தொடர்புகொள்ள வேண்டும்.

உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.
தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி,
யாழ்பாவாணன் வெளியீட்டகம்.

சனி, 23 டிசம்பர், 2017

2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்


வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "மதுவை விரட்டினால் கோடி நன்மை!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து 31/12/2017 இற்கு முன்னதாக எதிர்பார்க்கின்றோம்.

ஏற்கனவே, இம்மின்நூல் வெளியீடு பற்றி கீழ்வரும் இணைப்புகளில் அறிவித்துவிட்டோம். கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன.


மதுவினால் உடல் நலம், மக்கள் நலம், நாட்டு நலம் கெடுமென்றும் மதுவினால் சீர்கெட்ட நிலைமைகளைச் சுட்டிக்காட்டியும் நன்மை கருதி மதுவை விலக்கி வையென்றும் வெளிப்படுத்தும் கவிதைகளை 10 - 20 வரிகளில் 31/12/2017 இற்கு முன்னதாக எழுதி அனுப்பலாம்.

தாங்கள் விரும்பிய தலைப்பில் முன்கூட்டியே எழுதிய பதிவாகவோ புதிதாக எழுதிய பதிவாகவோ இருந்தாலும் வலைப்பதிவர்கள் தங்கள் பதிவுகளை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு MS-Word File ஆக Latha Unicode Font இல் தட்டச்சுச் செய்து அனுப்பிவைக்க வேண்டும். பதிவுகள் யாவும் 10 - 20 வரிக் கவிதைகளாக (மரபுக் கவிதையாகவோ புதுக் கவிதையாகவோ) சொந்தப் படைப்பென உறுதிப்படுத்தி 31/12/2017 இற்கு முன்னதாக அனுப்ப வேண்டும்.

"License: Creative Commons Attribution-ShareAlike 4.0 International உரிமம் – கிரியேட்டிவ் கொமன்ஸ் காரணமறிவு - எல்லோரும் படிக்கலாம்; பகிரலாம்." என்ற உடன்பாட்டின் படி யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளியிடும் "மதுவை விரட்டினால் கோடி நன்மை!" என்ற அன்பளிப்பு (இலவச) மின்நூலில் எனது பதிவு இடம்பெற அனுமதியளிப்பதோடு ஒத்துழைப்பு வழங்குகிறேன் எனப் பதிவினை அனுப்பும் மின்னஞ்சலில் குறிப்பிடவேண்டும்.

மின்னஞ்சலுக்கான தலைப்பு (Subject) '2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்' என்றவாறு இருக்க வேண்டும். அத்துடன் பதிவை அனுப்பும் வலைப்பதிவர் PP Size அளவான முகம் அளவு படத்துடன் சொந்தப் பெயர், புனைப்பெயர், மின்னஞ்சல் முகவரி, நடைபேசி எண், வலைப்பக்க முகவரி என்பன அனுப்ப வேண்டும். குறித்த மின்நூலில் தங்களை அறிமுகப்படுத்த அதுவே பயன்படும்.

சிறந்த மூன்று பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம். Dicovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் இந்திய உரூபா 500/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான வெகுமதித் தாள்கள் (Gift Certificates) பரிசு பெறும் மூவருக்கும் தனித்தனியே வழங்கப்படும். இம்மின்நூல் வெளியீட்டிற்கான பரிசில்களை 31/01/2018 இற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படும்.

உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.
தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி,
யாழ்பாவாணன் வெளியீட்டகம்.

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி நூல் வெளியீடு

அன்பிற்கினிய வலைவழி உறவுகளே!

வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக மின்நூல்களை வெளியிட முன்வந்திருக்கிறது. இவற்றை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாகப் (இலவசமாகப்) பகிரவுள்ளோம். "மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017" என்னும் முயற்சியில் இரண்டு மின்நூல்களை வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம்.
01. செம்மொழியாம் தமிழைக் காப்போம்
02. உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - 01

மேற்காணும் இரண்டு மின்நூல்களில் பதினான்கு அறிஞர்களுக்கும் அதிகமானோர் தமது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளனர். இவ்விரண்டு மின்நூல்களிலும் தமிழின் தொன்மை, தமிழின் எதிர்காலம், உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி எனப் பல  ஆய்வுப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. வாசகர் கருத்துகள் இணைக்கப்பட்டிருக்கிறது. சிறந்த தமிழ் அறிஞர்கள் மதிப்புரை வழங்கியுள்ளனர். இவ்விரண்டு மின்நூல்களையும் கருத்திற்கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வினைச் செய்ய பயனுள்ள தகவல் நிறையவே உண்டு.

தமிழ் பேசும் மக்கள் வாழும் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இவ்விரண்டு மின்நூல்களையும் பத்து நூறாயிரத்திற்கு (இலட்சத்திற்கு) அதிகமான வாசகர்கள் வாசிக்கும் வண்ணம் வலைப்பதிவர்கள் எல்லோரும் இவற்றைப் பகிர்ந்து உதவுங்கள். திறனாய்வாளர்கள் எல்லோரும் இவ்விரண்டு மின்நூல்களுக்கும் வலுச்சேர்க்கும் முகமாகத் தங்கள் திறனாய்வினைத் தந்துதவுங்கள். பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் உயர்நிலைக் கல்லூரி, பாடசாலை ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களை வாசிக்கத் தூண்டவும் பலருக்குப் பகிரச் செய்யவும் உதவுங்கள்.

வலை வழி ஊடகங்களும் இலத்திரனியல் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் இவ்விரண்டு மின்நூல்களின் உயர்ந்த நோக்கத்தையும் உயர்ந்த எண்ணங்களையும் பகிர்ந்து உதவுங்கள். இவ்வாறு இவ்விரண்டு மின்நூல்களுக்கும் கிடைக்கும் ஆதரவினை வைத்து நன்கொடையாளர்களின் உதவியினைப் பெற்று நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் உள்ள பொது நூலகங்களுக்காவது இலவசமாக அச்சடித்து இந்நூல்களை வழங்க முடியுமென நம்புகின்றோம். இதற்கு மேல் நானுரைப்பது அழகல்ல; நூல்களைப் பதிவிறக்குங்கள்; நூல்களுக்குள் புகுந்து தேடல்களைச் செய்யுங்கள்; உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்.


இலகுவாகக் குளிர்மையாகப் பார்வையிட

வழமையாகப் பார்த்துப் பதிவிறக்க


உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.

ஞாயிறு, 14 மே, 2017

புதிய மின்நூல் வெளியீடு பற்றிச் சில...

"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலிற்கான பதிவுகள் யாவும் 15/05/2017 நள்ளிரவு 11.59 மணிக்குப் (இலங்கை-இந்திய நேரப்படி) பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதாவது, 16/05/2017 இற்கு முன்னதாக உங்கள் பதிவுகளை wds0@live.com இற்கு அனுப்பிவைக்க வேண்டும்.
மதிப்புக்குரிய வலையுறவுகளே! "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே! - முதற் தொகுப்பு" என்ற மின்நூலிற்கான பதிவுகளை அனுப்பிவைத்த உள்ளங்களுக்கும் நடுவராகச் செயற்பட்டு ஒத்துழைத்த அறிஞர்களுக்கும் நன்றி.

நடுவர்களின் விருப்பை ஏற்று "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே! - இரண்டாம் தொகுப்பு" என்ற மின்நூல் 'வாசிப்புப் போட்டி-2017' நடைபெற்ற பின்னர் வெளியிடவுள்ளோம்.

அடுத்ததாக
"தமிழர் ஆட்சி செய்த குமரிக்கண்டம்"
"இந்தியா முழுவதும் தமிழர் வாழ்விடமே!"
"இலங்கை முழுவதும் தமிழர் வாழ்விடமே!"
ஆகிய தலைப்புகளில் மின்நூல் வெளியிட எண்ணியுள்ளோம். "இந்தத் தலைப்புகளில் மின்நூல் வெளியிட தாங்கள் அனுமதிப்பீர்களா?" என Google+, Facebook இல் பகிர்ந்தேன்.

"நன்று, ஆய்வு பூர தகவல்களுடன் சொல்லுங்கள். நற்பணி." என்றும் "நம்பகரமான ஆதாரங்களை இணைத்தல் வெற்றியாகும்." என்றும் "அனுமதி எதற்கு, வெளியிடுங்க பார்க்கலாம்" என்றும் அறிஞர்கள் எனக்குப் பதிலளித்தார்கள்.

"தற்போது 'உலகில் முதலில் தோன்றியது தமிழ் மொழி! - முதற் தொகுப்பு' என்ற மின்நூல் வெளியிட உள்ளேன். அதற்குப் பல அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டியே வெளியிடுகிறேன். இவற்றுக்கும் அவ்வேறே அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி வெளியிடுவேன்." என நானும் அவர்களுக்குப் பதில் வழங்கினேன்.

தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணியென பயனுள்ள மின்நூல்களை வெளியிடும் பணியில் நாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகளைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

திங்கள், 1 மே, 2017

கால நீடிப்பு - மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017


வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் கேட்டிருந்தோம்.

எமது அறிவிப்பைப் பணிவோடு ஏற்றுத் தமிழ் பற்றாளர்கள் பத்து ஆள்கள் தமது படைப்புகளை அனுப்பி இருந்தனர். சிலர் கால நீடிப்புக் கேட்டிருந்தனர். எல்லோரது ஒத்துழைப்பும் அல்லது எல்லோரது கூட்டு முயற்சியும் தான் "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிடப் பின்னூட்டியாக இருக்கும். எனவே, May 15 ஆம் நாள் வரை இம்மின்நூலுக்கான உங்கள் பதிவுகளை அனுப்பி வைக்கலாம் என்பதை அறியத்தருகின்றோம். அதாவது, 16/05/2017 இற்கு முன்னதாக உங்கள் பதிவுகளை அனுப்பிவைக்க வேண்டும்.

உங்கள் பதிவுகளை 'மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017' - https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html என்ற பதிவில் குறிப்பிட்டவாறு தங்கள் படம், தங்களைப் பற்றிய சுருக்கம் (நான்கைந்து வரிகளில்), தங்கள் வலைப்பூவில் வெளியிட்ட பின் அதன் இணைப்பு ஆகியவற்றை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

நன்நூல்.கொம் ஊடாகத் தாங்கள் விரும்பிய நூல்களைப் பெறப் பத்து டொலர் பெறுமதியான வெகுமதி தாள்கள் (Gift Certificates) சிறந்த மூன்று பதிவுகளை அனுப்பிய ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். பதிவுகளை அனுப்பிவைக்கும் அறிஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இவ்வொழுங்கு மூவர் என்ற நிலையைக் கடந்து நால்வருக்கு அல்லது ஐவருக்குப் பத்து டொலர் பெறுமதியான வெகுமதி தாள்கள் (Gift Certificates) வழங்க எண்ணியுள்ளோம்.

யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிடுவதற்கு அனுப்பி வைக்கப்பட்ட பத்து அறிஞர்களின் பதிவுகளை அவர்கள் அனுப்பிவைத்த ஒழுங்கில் கீழே தருகின்றோம். அப்பதிவுகளுக்கான காப்புரிமை (Copy Rights) அப்பதிவுகளை ஆக்கியோருக்கே உடையது. எவரும் அவர்களது அனுமதியின்றி அவர்கள் பதிவைக் கையாள முடியாது.

01. தமிழ் மொழி கட்டுரை - ஆசோகன் குப்புசாமி

02. தமிழும் தாய் மொழியும் - ஜி.எம்.பாலசுப்பிரமணியம்

03. உயர்தனிச்செம்மொழி தமிழ் - முனைவர் இரா.குணசீலன்

04. இன்னும் 100 வருடங்களில் தமிழ்மொழி அழிந்துவிடுமா? - பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

05. தமிழ் மொழியின் தொன்மை - பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

06. உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே! - அபிநயா சிறிகாந்

07. உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே - உமா நாராயணன்

08. முதற்றாய்மொழி: சில புரிதல்கள் - முனைவர் த.சத்தியராஜ்

09. தமிழின் செம்மொழித் தகுதிகள் - முனைவர் மு.பழனியப்பன்

10. தமிழ் மொழி உலகில் முதலில் தோன்றியதா? - யாழ்பாவாணன்

கூகிளில் 'உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்' குழுவூடாகவும் முகநூலில் 'தமிழ் பதிவர்களின் நண்பன்' குழுவூடாகவும் மேற்காணும் பதிவுகளை நாம் அறிமுகம் செய்துள்ளோம். வாசகர்களாகிய நீங்களும் இப்பதிவுகளை உங்கள் மக்களாய (குமுகாய/ சமூக) வலைப்பக்கங்களில் பகிர்ந்து உதவுங்கள்.

உங்களுக்குத் தெரிந்த வலைப்பதிவர்களில் எவராயினும் மேற்காணும் பதிவுகளைப் போல ஆக்கியிருப்பின், அவர்களுக்கு இம்முயற்சியைத் தெரிவித்து அவர்களது பதிவுகளையும் இம்மின்நூலில் இடம்பெறச் செய்ய உதவுங்கள்.

இம்முயற்சியை "நாளைய தலைமுறைக்குத் தமிழின் தொன்மையை உணர்த்தும் பணி" என்ற நோக்கில் தொடங்கினோம். PDF, Word கோப்புகளாக அனுப்பாமல் வலைப்பூக்களின் இணைப்பைக் கேட்டிருந்தோம். அதாவது, அவர்களுக்கான அடையாளத்தையும் அவர்களது வலைப்பூக்களையும் பன்னிரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவர்களுக்குத் தெரியப்படுத்தவே! இதனால், வலைப்பூக்கள் வழியே உலகெங்கும் தமிழைப் பரப்பலாம் என்ற நம்பிக்கையே!

உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.