செவ்வாய், 17 ஏப்ரல், 2018

2018-4 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்


வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - part-2" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான கட்டுரைகளை வலைப்பதிவர்களிடம் இருந்து 31/07/2021 இற்கு முன்னதாக எதிர்பார்க்கின்றோம்.கீழுள்ள ஒளிஒலி (Video) பதிவில் உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி என்று சொல்லப்படுகிறது. சற்றுக் கவனித்த பின் தங்கள் கட்டுரைகளை ஆக்குங்கள்.


நாம் ஏற்கனவே "உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - part-1" என்ற நூலை வெளியிட்டுவிட்டோம். அதன் தொடராக இந்நூல் அமைய இருப்பதால், அவற்றைப் பதிவிறக்கிப் படித்த பின் சிறந்த கட்டுரைகளை ஆக்கி எமது தளத்தில் இணைக்கலாம்.
.
கட்டுரைகளை இணைக்க வேண்டிய தளம்: http://tev-zine.forumta.net/ (இத்தளத்தில் பயனர் பெயர், கடவுச் சொல் மற்றும் தங்களைப் பற்றிய தகவல் (Profile) வழங்கி இணையவும். குறித்த மின்நூலில் தங்களை அறிமுகப்படுத்த அதுவே பயன்படும்.) மின்னஞ்சலில் கட்டுரைகளை அனுப்பினால் ஏற்றுக்கொள்ள முடியாது.
முடிவு நாள்: 31/07/2021
வெளியிடுவோர்: யாழ்பாவாணன் வெளியீட்டகம்
மின்நூல் வெளியீடு: 28/09/2021
மீளவும் கால நீடிப்புச் செய்துள்ளோம்.

"License: Creative Commons Attribution-ShareAlike 4.0 International உரிமம் – கிரியேட்டிவ் கொமன்ஸ் காரணமறிவு - எல்லோரும் படிக்கலாம்; பகிரலாம்." என்ற உடன்பாட்டின் படி யாழ்பாவாணன் வெளியீட்டகம் "உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - part-2" என்ற அன்பளிப்பு (இலவச) மின்நூலை வெளியிடும். எனவே, விரைவாக 
http://tev-zine.forumta.net/ என்ற தளத்தில் இணைந்து தங்கள் கட்டுரைகளை இணைக்கவும்.

உலகில் முதலில் தோன்றியது தமிழே என்று சிறப்பாகச் சான்றுப்படுத்தும் கட்டுரை ஒவ்வொன்றுக்கும் 10 டொலர் பெறுமதியான நூல்கள், Dicovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் வாங்க வெகுமதிச் சான்றிதழ் (Gift Certificates) ஒவ்வொருவருக்கும் தனித்தனியே வழங்கப்படும். 

"உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - part-2" என்ற தலைப்பிலான மின்நூலில் சேர்த்துக்கொள்ள இயலாத கட்டுரைகள் பிறிதொரு தலைப்பிலான மின்நூலாக வெளியிட உள்ளோம். அவற்றிற்குப் பரிசில் வழங்கப்படமாட்டாது.. இம்மின்நூல் வெளியீட்டிற்கான பரிசில்களை 20/10/2021 இற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படும்.

எமது பணிக்கு உதவ விரும்பும் கொடையாளிகள், தங்கள் விளம்பரங்களை வழங்கி உதவலாம். பின் அட்டை: 30 அமெ.டொலர், பின் உள் அட்டை: 20அமெ.டொலர். பணத்தைப் PayPal ஊடாகச் செலுத்த முடியும். விளம்பரம் A5 தாளில் all margin: 0.5inch ஆக இருக்க .jpg or .gif file ஆகப் படமாக அனுப்ப வேண்டும். விளம்பரம் வழங்க விரும்புவோர் wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு 31/07/2021 இற்கு முன்னதாகத் தொடர்புகொள்ள வேண்டும்.

உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.
தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி,
யாழ்பாவாணன் வெளியீட்டகம்.

4 கருத்துகள்:

நல்லது, கெட்டது எதுவானாலும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவும்.