திங்கள், 20 மார்ச், 2017

மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017


வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

சிறந்த மூன்று பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம். அதாவது, நன்நூல்.கொம் ஊடாகத் தாங்கள் விரும்பிய நூல்களைப் பெறப் பத்து டொலர் பெறுமதியான வெகுமதி தாள்கள் (Gift Certificates) சிறந்த மூன்று பதிவுகளை அனுப்பிய ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.

http://www.ypvnpubs.com/2017/03/blog-post_17.html என்ற இணைப்பைச் சொடுக்கி 'தமிழும் உலகின் முதல் பத்து மொழிகளும்' என்ற பதிவைப் படித்த பின் "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற தலைப்பிற்கு ஏற்ற பதிவுகளை எமக்கு அனுப்பிவைக்கலாம். உலகில் முதல் தோன்றிய மொழி தமிழென்பதை நம்பக்கூடியவாறு பதிவுகளை ஆக்குதல் வேண்டும்.

தாங்கள் விரும்பிய தலைப்பில் முன்கூட்டியே எழுதிய பதிவாகவோ புதிதாக எழுதிய பதிவாகவோ இருந்தாலும் வலைப்பதிவர்கள் தங்கள் பதிவுகளை தங்கள் வலைப்பூக்களில் வெளியிட்ட பின்னர், அதற்கான இணைப்பை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

PDF, Word கோப்புகளாக அனுப்பி வைக்கக்கூடாது. வலைப்பூ இல்லாதவர்கள் வலைப்பூ ஒன்றை உருவாக்கி, அதிலே தங்கள் பதிவுகளை வெளியிட்ட பின்னர், அதற்கான இணைப்பை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

"License: Creative Commons Attribution-ShareAlike 4.0 International
உரிமம் – கிரியேட்டிவ் கொமன்ஸ் காரணமறிவு - எல்லோரும் படிக்கலாம்; பகிரலாம்." என்ற உடன்பாட்டின் படி யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளியிடும் "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற அன்பளிப்பு (இலவச) மின்நூலில் எனது பதிவு இடம்பெற அனுமதியளிப்பதோடு ஒத்துழைப்பு வழங்குகிறேன் எனப் பதிவின் இணைப்பை அனுப்பும் மின்னஞ்சலில் குறிப்பிடவேண்டும்.

மின்னஞ்சலுக்கான தலைப்பு (Subject) 'மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017' என்றவாறு இருக்க வேண்டும். அத்துடன் பதிவை அனுப்பும் வலைப்பதிவர் 120x160 pixel அளவான முகம் அளவு படத்துடன் ஐந்தாறு வரிகளில் தங்களைப் பற்றிய அறிமுகம் எழுதி அனுப்ப வேண்டும். குறித்த மின்நூலில் தங்களை அறிமுகப்படுத்த அதுவே பயன்படும்.

ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட பதிவுகளின் இணைப்புகளையும் வழங்கலாம். பதிவுகளைச் சித்திரை முப்பதாம் நாளுக்கு (30/04/2017) முன்னதாக அனுப்பிவைக்க வேண்டும். தங்கள் வலைப்பூக்களிற்கு பூட்டுப் போட்டிருந்தால் பரவாயில்லை. வாசகர் படித்துக் கருத்துப் போட அனுமதியளித்த வலைப்பூப் பதிவையே தெரிவுசெய்வோம்.

பதிவிற்கு வலுச் சேர்க்கும் நோக்கில் அமைந்த அதிகமான வாசகர் கருத்துகளைக் கொண்ட பதிவுகளையே சிறப்புப் பதிவாகத் தெரிவு செய்வோம். அதற்காகத் தாங்கள் ஆக்கிய பதிவை மக்களாய (சமூக) வலைத்தளங்களில் அடிக்கடி விளம்பரப்படுத்தலாம்.

எமக்குக் கிடைத்த பதிவுகளின் இணைப்பை நாமும் மக்களாய (சமூக) வலைத்தளங்களில் அறிமுகம் செய்து வைப்போம். 30/04/2017 இற்குப் பின் வரும் பதிவுகளின் இணைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. ஈற்றில் பதிவுகளைத் தொகுத்து மின்நூல் ஆக்கி வெளியிட்டதும் பரிசில் பெறும் பதிவிற்கு உரிய அறிஞர்களின் விரிப்பு இந்த வலைப்பூவில் வெளியிடுவோம். பின் அவர்களுக்கான Gift Certificates அனுப்பிவைக்கப்படும்.

உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.


"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலிற்கான பதிவுகளை எழுதுவோருக்கு உதவும் பதிவு.

உலகின் முதன் மொழி தமிழா?
http://www.ypvnpubs.com/2017/03/blog-post_24.html

37 கருத்துகள்:

  1. முன்தோன்றிய மூத்த மொழி தமிழ் என்பதை படிக்க ஆர்வம், மகிழ்ச்சி. அதை நிறுவும் அளவு புலமை எனக்கில்லை! எனவே இதில் மற்ற நண்பர்கள் என்ன எழுதுகிறார்கள் என்று பார்க்க ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்நூலில் பார்க்க முடியுமே!
      பொறுத்திருந்து பார்ப்போம்!

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் மதியுரைப்படி மாற்றம் செய்து விட்டேன். ஐயா!

      நீக்கு
  3. மிக அருமையான முயற்சி ஐயா! மிக்க நன்றி! முடிந்தால் நானும் கலந்து கொள்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்களும் கலந்து சிறப்பிக்க முடியும்.
      பாராட்டுக்கு நன்றி!

      நீக்கு
  4. அருமை...மூத்த மொழியான தமிழுக்கு..,முன்னுரிமை கொடுப்பது சந்தோசத்தை தந்தது. நன்றி..,!

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு முயற்சி நண்பரே.எனது பதிவை விரைவில் அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்களும் கலந்து சிறப்பிப்பதில் மகிழ்ச்சி.
      பாராட்டுக்கு நன்றி!

      நீக்கு
  6. தாங்கள் எடுத்திருக்கும் இந்த நற்பணிக்கு எனது வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  7. அயராத தமிழ் பணிக்கு தலை வணங்குகிறேன்

    பதிலளிநீக்கு
  8. மிக அருமையான முயற்சி, என்னால் இதில் பங்கு பற்றுமளவுக்கு தகுதியும் நேரமும் இல்லை... பங்கேற்க இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் நற்பணி சிறந்தோங்க வாழ்த்துகிறேன். முயற்சிகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல முயற்சி.தமிழை விட சிறந்த மொழி யாதும் இல்லை.
    வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  11. சில உண்மைகளை அடிக்கடி கூறிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் மக்கள் மறந்து போய்விடுவர். எனவே தங்கள் முயற்சி பாராட்டப்பட வேண்டியது.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்
    நல்லதொரு முயற்சி..தொடருங்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ஐயா
    மிக அருமையான முயற்சி
    உங்கள் நற்பணி சிறந்தோங்க வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு

  14. வாழ்கதமிழ் வளர்கதமிழ்
    தாயும் தமிழும் கண்எனகாணு
    தாய்தழே உயிர்என்று எண்ணு
    கன்னிதமிழ்தாசன்சென்னைஇந்தியா

    பதிலளிநீக்கு

நல்லது, கெட்டது எதுவானாலும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவும்.