ஞாயிறு, 17 டிசம்பர், 2017

வாசிப்புப் போட்டி - 2017 தேர்வுக் கேள்விகள்

https://seebooks4u.blogspot.com/2017/10/2017.html என்ற இணைப்பில் வெளியிடப்பட்ட பதிவின் வழிகாட்டலின் படி வாசிப்புப் போட்டி - 2017 இற்கான கேள்விகளுக்கு நிறைவான பதிலை அனுப்பி வெற்றி பெறுங்கள்.

மேற்காணும் இணைப்புகளைச் சொடுக்கி மின்நூல்களைப் பதிவிறக்கிப் படியுங்கள்.

இங்கு பத்துத் தேர்வுக் கேள்விகள் தரப்படுகிறது. பொத்தகங்களைப் படித்து; பொத்தகங்களில் உள்ளவாறு பதிலைத் தயாரித்து அனுப்பலாம். விடைகள் 48 மணி நேரம் கழித்து இத்தளத்தில் வெளியிடப்படும்.

"செம்மொழியாம் தமிழைக் காப்போம்" என்ற நூலில் இருந்து...
1. எட்டுச் செம்மொழிகளின் பெயர்களையும் தருக? அவற்றில் இன்றுவரை வாழும் மொழிகளையும் வேறாகத் தருக?
2. தமிழைச் செவ்வியல் மொழியென்பதா? தமிழைச் செம்மொழி என்பதா? இதில் சரியானது எது? விளக்குக.
3. ஒரு மொழியைச் செம்மொழி என்றுரைப்பது பற்றி ஜார்ஜ் ஹர்ட் எவ்வாறு கருதுகிறார்?
4. இந்தியாவில் கன்னடர்கள் தமிழர்களாக இருந்த காலம்; தெலுங்கர்கள் தமிழர்களாக இருந்த காலம்; மலையாளிகள் தமிழர்களாக இருந்த காலம் ஆகியவற்றைக் குறிப்பிடுக?

"உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி" என்ற நூலில் இருந்து...
5. சமஸ்கிரத மொழியை விடத் தமிழ் முந்திய மொழி எனக் கருதப்படுகிறது. அது பற்றிய குறிப்பைத் தருக?
6. தமிழின் பெருமை தமிழராலும் அறியப்படாமல் இருப்பதற்குப் பத்துச் சாட்டுகள் உள்ளன. அவற்றை விவரிக்க?
7. "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி" என்றுரைக்கும் பாடலும் பாடியவர் பெயரும் தருக?
8. குமரிக்கண்டம் தொடர்பான கருத்துக்குச் சிலப்பதிகாரம், தொல்காப்பியம் கூறும் விளக்கமென்ன?
9. பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் கூறும் குமரிக்கண்டம் எல்லைகளை விளக்கு?
10. 2000 ஆம் ஆண்டில் இலங்கை வானொலி கூறிய தகவற் படி உலக மொழிகளின் எண்ணிகை எவ்வாறு மாறும்?

பதில் வழங்குவோர் 48 மணி நேரத்திற்குள் yarlpavanang1@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு subject இல் "வாசிப்புப் போட்டி - 2017" எனத் தட்டச்சுச் செய்து, கேள்விகளுக்கான சரியான பதில், போட்டியாளரின் சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை அனுப்பவும்.

போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற வாழ்த்துகள்!

1 கருத்து:

நல்லது, கெட்டது எதுவானாலும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவும்.