வலைப்பூ வழியே 'தமிழ் மரபுக் கவிதை - த.ஜெயசீலன் (http://www.thanajeyaseelan.com/?page_id=861)' என்ற பதிவைப் படித்துப் பாருங்கள். உங்களுக்கும் மரபுக் கவிதை எழுத வேணும் போல
விருப்பம் (ஆசை) வரும். அப்படி நீங்கள் விருப்பியபடி (ஆசைப்படி) எழுதிய மரபுக்
கவிதைகளைப் போட்டிகளுக்கு அனுப்பிப் பரிசில்களும் பெறலாம். அதற்கேற்ப
"யாழ்பாவாணன் வெளியீட்டகம்" மரபுக் கவிதை எழுதும் போட்டி நடாத்த
முன்வருகிறது. சிறந்த கவிதைகளுக்கு பரிசில் (நூல்கள் வேண்டுவதற்கான வெகுமதி/பணச் (Gift) சான்றிதழ்) வழங்குவதோடு சிறந்த கவிதைகளை மின்நூலாக்கியும் வெளியிட்டு
வைக்கிறோம்.
எனது வலைப்பூ வழியே (https://ypvnpubs.blogspot.com/2019/01/blog-post.html) 'யாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்' என்ற பதிவினைப் பகிரும் போது மரபுக் கவிதை எழுதும்
போட்டி நடாத்தவுள்ளேன் எனத் தெரிவித்திருந்தேன். மரபுக் கவிதை எழுத உதவும் வகையில்
(http://www.ypvnpubs.blogspot.com/2019/02/blog-post.html) 'பாப்புனைய விரும்புங்கள்' என்ற மின்நூல் ஒன்றும் வெளியிட்டுள்ளேன். இனி
மரபுக் கவிதை எழுதும் போட்டிக்கு நீங்கள் தயாராகலாம் தானே!
போட்டித் தலைப்பு: உலகெங்கும் நற்றமிழ்
பேணுவோம்!
மரபுக் கவிதை வகை: ஆசிரியப்பா / அகவற் பா
கவிதை அமைவு: ஈரசைச் சீர்களைக் கொண்ட
அளவடியாலும் ஈற்றயலடி முச்சீராகவும் ஒவ்வோர் அடியிலும் 1 ஆம், 3 ஆம் சீர்களில் மோனையும் இரண்டு அடிகளுக்கு ஓர்
எதுகையும் ஈற்றுச் சீர் ”ஏ” காரத்தில் முடியக் கவிதை அமைதல் வேண்டும்.
கவிதை வரிகள்: 15 - 20 வரையான அடிகள்
பரிசில்: 5USD
/ 350INR / 880LKR பெறுமதியான நூல்கள்
வேண்டுவதற்கான வெகுமதி/பணச் (Gift) சான்றிதழ். பரிசில்களுக்கான நூல்களை சென்னை டிஸ்கவரி புக் பலஸ், யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலை ஆகியவற்றில் பெறலாம்.
பரிசில் எண்ணிக்கை: சிறந்த மூன்று கவிதைகளுக்குப் பரிசில் உண்டு.
குறிப்பு: ஆசிரியப்பா / அகவற் பா கவிதை
அமைவுக்கு உட்பட்ட கவிதைகளே மின்நூலில் இடம்பிடிக்கும்.
தீர்வு: போட்டிக்கான நடுவர்களின் தீர்ப்பே
உறுதியானதும் இறுதியானதும் ஆகும்
போட்டிக்கான முடிவு நாள்: 31/05/2021
மீளவும் கால நீடிப்புச் செய்துள்ளோம்.
போட்டியாளர்கள் தங்கள் கவிதைகளை 'தமிழ் இலக்கிய வழி' தளத்தில் (http://tev-zine.forumta.net/)
உறுப்பினராகி, 'உலகெங்கும் நற்றமிழ் பேணுவோம்!' என்ற தலைப்பின் (http://tev-zine.forumta.net/f16-forum) கீழ் பதிவிடவும். 31/05/2021 இன் பின் பதியப்படும் பதிவுகள் போட்டியில்
சேர்க்க முடியாது.
உலகெங்கும்
தமிழ் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் இப்பணித்திட்டத்திற்கு உங்கள் ஒத்துழைப்பை நாடி
நிற்கின்றோம். நீங்களும் உங்கள் நண்பர்களுக்குத் தெரிவிக்கவும். எமது போட்டிகளில்
எல்லோரையும் பங்குபற்றச் செய்து உதவுங்கள்.
கீழ்வரும்
அறிவிப்புகளைப் படித்து, உங்கள் பெறுமதி மிக்க
படைப்புகளை 'தமிழ் இலக்கிய வழி' தளத்தில் (http://tev-zine.forumta.net/)
இணைத்துப்
பரிசில்களைப் பெறலாம். காலநீடிப்பு வழங்கியுள்ளோம்.
2018-4 மின்நூல் வெளியீடும்
பரிசில் வழங்கலும்
2018-3 மின்நூல் வெளியீடும்
பரிசில் வழங்கலும்
தமிழ் இலக்கிய
வழி - மின் இதழுக்கான பதிவுகளை இணையுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
நல்லது, கெட்டது எதுவானாலும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவும்.